உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

மனோன்மணியைத் தன் மகனுக்கு மணம் செய்விக்கவும் சூழ்ச்சி செய்கிறான். இப்படிச் சூழ்ச்சி செய்து சேர மன்னனைப் படையெடுத்து வரச் செய்தான்” என்று கூறினான்.

"சீச்சீ! சேரன் வஞ்சனைக்கு இசையமாட்டான். நீ சொல்வது பொய்” என்றான் நடராஜன்.

அதுகேட்ட உழவன் கூறுகிறான்: "பொய் அல்ல சாமி! மெய். உள்ளது. கேளுங்கள் சொல்லுகிறேன். என் மைத்துனன் தன் தாய் செத்ததற்குத் திதி கேட்கப் புரோகிதர் சேஷையரிடம் போனான் என்றுரைத்து, இரண்டாவது உழவனைப் பார்த்து, “அன்று ஞாயிற்றுக் கிழமை. அன்றுதான் சாத்தன் உன்னிடம் சண்டையிட்டான்” என்று சொல்லி, மீண்டும் நடராஜனிடம் கூறுகிறான்: "புரோகிதருடைய மாமனார் ஆமைப் பலகையில் உட்கார்ந்துகொண்டு, மருமகன் சேஷையரிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.” குரலைத் தாழ்த்தி மெல்ல, “அவர்கள் பலப்பல இரகசியங்கள் பேசிக்கொண்டார்கள்” என்றான். "இங்கு யார் இருக்கிறார்கள், பயப்படாமல் சொல்” என்றான்

நடராஜன்.

66

இரண்டாவது உழவன், “புரோகிதரின் மாமனார் மந்திரி வீட்டு ஜோசியர்” என்று ஆரம்பித்தான். முதல் உழவன் அவனைத் தடுத்து, “பொறு பொறு, நான் சொல்கிறேன். என் மைத்துனன் சாஸ்திரி வீட்டுக்குப் போனான். அப்போ, புரோகிதரின் மாமனார் சொன்னாராம்: "மாப்பிள்ளை! நேற்று மந்திரியின் ஆத்துக்காரி கேட்டாள். பல தேவனின் ஜாதகத்தில் ராஜயோகம் இருக்கிறது என்று சொன்னீர்களே! அந்தயோகம் எப்போது வரும் என்று கேட்டாள். சீக்கிரம் வரும் என்றேன். பிறகு மனோன்மணியின் திருமணத்தைப் பற்றிக் கேட்டாள். அது நடக்காது என்று சொன்னேன். அவள் மேலுக்கு வருத்தம் அடைந்ததுபோலக் காணப்பட்டாலும் மனத்தில் மகிழ்ச்சியடைந்தாள் என்று தெரிந்தது. பெரிய மனுஷாளின் எண்ணங்கள் அவர்கள் முகத்தி லிருந்தே வெளியாகின்றன' என்று சொல்லிச் சிரித்தாராம். பிறகு என் மைத்துனன் திவசத்துக்கு நாள் தெரிந்துகொண்டு வந்தான். இவைகளை என்னிடம் சொன்னான். சாக்கி வேண்டுமானால் காக்கைச் சுப்பனைக் கேட்கலாம்” என்று கூறினான்.