உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

நான்காம் களம்

66

157

சுந்தரமுனிவர் ஆசிரமத்தில் காலைப்பொழுதில் அவருடைய சீடர்களாகிய நிஷ்டாபரரும் கருணாகரரும் உரையாடுகின்றனர். நிஷ்டாபரர் கூறுகிறார்: கருணாகரரே! வேத வேதாந்தங்களை யெல்லாம் படித்தறிந்த நீர், போர் வந்தது பற்றிக் கவலைகொண்டு இரவெல்லாம் தூக்கமில்லாமல் கண் விழித்தது ஏன் ? போர் உலகத்து இயற்கைதானே? போரில் தானா மக்கள் சாகிறார்கள்? போரில்லாமலே நாள்தோறும் எண்ணிறந்த உயிர்கள் சாகின்றன. எறும்பு முதலாக எல்லா உயிர்களும் சாவதைக் கணக்கிட்டுச் சொல்லமுடியுமா? இதோ இச் சிலந்தி அதனை எட்டுக் கால்களினாலும் கட்டிப் பிணைத்துக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஈ கதறி அழுகிற குரலை யார் கேட்கிறார்கள்? உலகத்தை யெல்லாம் ஒன்றாக நோக்கும்போது, உடம்பும் அதனைச் சேர்ந்த ஒரு உறுப்புதானே ? ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ள இந்தப் பூமி, சூரிய மண்டலத்தின் ஒரு சிறுதுளி. வானத்தில் காணப்படுகிற விண்மீன்கள் ஒவ்வொன்றும் சூரியனைவிட எவ்வளவு பெரியவை! இந்தச் சூரியனும் விண் மீன்களும் எல்லாம் சேர்ந்து ஒரு பிரமாண்டம் என்று கூறுவர். இதுபோல ஆயிரத்தெட்டு பிரமாண்டங்கள் உள்ளன என்பர். ஆயிரத்தெட்டு என்றால், கணக்காக ஆயிரத்தெட்டு என்பதல்ல, கணக்கற்றவை என்பது பொருள். இந்த ஆயிரத்தெட்டு பிரமாண்டங்களும், திருமாலுடைய திருமாலுடைய கொப்பூழில் தோன்றிய செந்தாமரைப் பூவின் பல இதழ்களில் ஒரு இதழிலே பிரமனாகிய சிலந்தி அமைந்த சிறு கூடு. ஏன்? அந்தத் திருமாலும் பெருங்கடலிலே சிறுதுரும்பு என்பர். திருமால் கிடக்கும் கடலும், மெய்ப்பொருளாகிய கடவுளுடன் ஒப்பிடும்போது சிறு கானல் நீர்போன்றது. இவைகளுடன் ஒப்பிடும்போது உயிர்களாகிய நாம் எதற்குச் சமம்?...

“நீர் யார் ? நான் யார்? ஊரேது? பேரேது? போரேது? மாயை யாகிய பெருங்கடலில் தோன்றிய குமிழிகள் போன்ற இப் பற்பல பிரமாண்டங்கள் அடிக்கடி வெடித்து அடங்குகின்றன. அதனைத் தடுப்பவர் யார்? இயற்றும் இத்தொழிலில் அகப்பட்ட நாம் இயந்திரக் கல்லில் அகப்பட்ட பயறுபோல் உள்ளோம். யார் என்ன செய்ய முடியும்? இந்த மாயை உம்மையும் பிடித்தால் நீர் கற்ற கல்வியும் ஞானமும் குருட்டரசனுக்குக் கொளுத்திவைத்த விளக்குப்போலவும் இருட்டறை யில் பொருளைக் காணவிரும்பும் கண்போலவும் பயனற்றதாகும். உலகத்தை ஊன்றிப் பார்க்குந்தோறும் துயரந்தான் அதிகப்படும்.