உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர, ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பனித்து நன்றெனவே தவவடிவாய் நின்றமகன் வணங்கா

நன்முனிவன் செல்வழியே நடந்துநனி தொடர்ந்தான்.

இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க

இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ரகைகள்

அரியரக சியந்தமக்குள் ளறைந்துநகை புரிய;

என்புருகப் பிணைந்தஅன்றில் இணைசிறிது பிரிய

ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ, அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள்

6

7

அலர்மலர்க்கண் ணீரருவி அகமுடைந்து தூவ;

8

விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரில் வாவல்

விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட;

இந்தவகை அந்தியைமுன் ஏவிஇர வென்னும்

இறைவியும்வந் திறுத்தனள்மற் றிளைஞருயிர் வாட. 9

செ. 6. ஏதோ தன் பழ நினைவு எழ

வழிப்போக்கனுக்கு

முனிவரைப்பற்றி ஏதோ பழைய நினைவு உண்டாக. கண்பனித்து - கண்ணீர் கசிந்து.

செ. 7. இழைக்க - செய்ய. அந்தரம் - ஆகாயம். சுந்தரம் -அழகு. தாரகைகள் - விண்மீன்கள். அறைந்து - சொல்லி.

செ. 8. பிணைந்த - சேர்ந்த. அன்றில் - அன்றிற் பறவை. இவை ஆணும் பெண்ணும் இணைபிரியாமல் இருக்கும் என்றும், பிரிந்தால் உடனே உயிர்விடும் என்றும் கூறுவர். இவை கற்பனைப் பறவை. அலர்மலர் அலர்கின்ற மலர்கள். கண்ணீர் அருவி கண்ணீர் அருவி என்றும், கள் (தேனாகிய) நீர் அருவி என்றும் இருபொருள் கொள்ளலாம். அகம் உடைந்து மனமுடைந்து. தூவ - சொரிய. செ. 9. விந்தை - வித்தை. தெரிக்க - சொல்ல. விளிப்பவரின் - கூப்பிடு - கிறவர்போல. வாவல் - வௌவால் பறவை, வௌவால் தனது தோல் சிறகுகளை அசைத்துப் பறப்பது கையை அசைத்து அழைப்பது போல இருக்கிறது. விளக்கொடு - வெளிச்சத்தோடு.