உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

என்னுடைய உயிர்த்துணைவர் எண்ணரிய அருளில்

ஏதோசிற் சாயையுன திடத்திருத்தல் கண்டு

மன்னுதவ மாமுனிவ! மனத்துயரம் உன்பால்

வகுத்தாறி னேன்சிறிது, மறுசாட்சி யில்லை. இனியிருந்து பெரும்பயனென்? இவ்வழலே கதி யென்று எரியுமழல் எதிரேநின் றிசைத்தமொழி முழுதும்

46

முனிசெவியிற் புகுமுனமே மூதுருவம் விளக்கி

முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி....

47

“சிவகாமி யானுனது சிதம்பரனே” என்னச்

செப்புமுனம் இருவருமற் றோருருவம் ஆனார்! எவர்தாமுன் அணைந்தனரென் றிதுகாறும் அறியோம். இருவருமொன் றாயினரென் றேயறையும் சுருதி.

பரிந்துவந்து பார்வதியும் பாரதியும் கஞ்சப்

பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த,

அருந்ததியும் அம்ம! இஃது அருங்கதியென் றஞ்ச

ஆர்வமுல கார்கவென ஆரணங்கள் ஆர்த்த.

48

49

-

செ. 46. சிற்சாயை -சில சாயல். வகுத்து விபரமாகச் சொல்லி. செ. 47. இவ்வழலே கதி - இந்த நெருப்பிலே விழுந்து இறப்பேன் என்பது கருத்து. மூதுருவம் விளக்கி - பழைய உருவத்தை வெளிப்படக் காட்டி. மொழிகுளறி சொல் தடுமாறி.

செ. 48. அறையும் - சொல்லும். சுருதி - இங்குச் செவி வழிச் செய்தி என்பது பொருள்.

சிவபெருமானின் சக்தி. பாரதி

செ. 49. பார்வதி கலைமகள், சரசுவதி. கஞ்சப் பார்க்கவி - செந்தாமரை மலரில் எழுந்தருளியுள்ள திருமகள், இலக்குமி. அருந்ததி – இவள் கற்புக்குத் தெய்வமாக விளங்குபவள். அருங்கதி - கிடைத்தற்கரிய நிலை. ஆர்வம் அன்பு. ஆர்க - பொருந்துக. ஆரணங்கள் - வேதங்கள். ஆர்த்த- ஆரவாரம் செய்தன.