உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

வா:

மனோ:

85

90

95

பூதப் பொருட்கே புலன்துணை அன்றிப் போதப் பொருட்குப் போதும் போதம். இரவியை நோக்கற் கேன்விளக் குதவி? கருவிநுண் மையைப்போற் காட்சியும் விளங்கும். பட்டே உணரும் முட்டா ளர்கள்போல் தொட்டே உணரும் துவக்கிந் திரியம்.

நுண்ணிய கருவியாம் கண்ணே உணரும் எண்ணறச் செய்த்தாம் நுண்ணிய ஒளியை! கண்ணினும் எத்தனை நுண்ணிய துள்ளம்! களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும். உண்மையாய் நமதுள் முருகிலவ் வுருக்கம் அண்மை சேய்மை என்றிலை; சென்றிடும். எத்தனை பெட்டியுள் வைத்துநாம் பூட்டினும் வானுள மின்னொளி ‘வடக்கு நோக்கி” யைத் தானசைத் தாட்டும் தன்மைநீ கண்டுளை? போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பைப் பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்! கூடும் கூடும்! கூடுமக் கொள்கை;

100 நம்பலாம் தகைத்தே!

நம்புவ தன்றிமற்று

என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள்

தருக்கவா தத்தால் தாபித் திடுவோர்

கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்!

அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத்

197

பூதப்பொருள் - பருப்பொருள், ஸ்தூலப் பொருள். புலன் துணை ஐம்புலன்களின் உதவி. போதப்பொருள் - அறிவுப் பொருள். இரவி சூரியன்.

வரி 85. கண் செம்மையாக இருந்தால் காட்சி நன்றாகத் தெரியும். படலம் முதலிய ஏற்பட்டால் காட்சி நன்றாகத் தெரியாது என்பது கருத்து. துவக்கு இந்திரியம் தொட்டு உணரும் புலன். வடக்கு நோக்கி வடக்கு திசையைக் காட்டும் ஒரு யந்திரம். இதில் உள்ள முள் எப்போதும் வடக்கு திசையிலேயே திரும்பி நிற்கும். பூதயாக்கை - பருவுடல். கரத்தால் - கையினால்.