உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

207

யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்? பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின்

180 அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர்

நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன் உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு

185 வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இஷ்டநா யகராம் ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்? இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் 190 செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும். சிற்றறி வா தலான் முற்றுநாம் உணரோம். அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங் கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம் 195 உளதென நம்பலே யூகம், அதனால் உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது நலமுற நமக்கிங் கிலகா ததினாற்

பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர் இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்? 200 யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்? பாருமிங் கீதோ! பரம தயாநிதி

நங்குரு நாத னென்பதார் ஒவ்வார்? நம்புவம் நீரும் நானுமிங் கொருப்போல்.

ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி,

பாரிசாதம் - பவழமல்லிப்பூ. இது இரவில் மலர்வது. 179-181 வரிகள்: வெண்ணிற மலர்கள் இராக் காலத்தில் மலர்வதன் காரணம், இருட்டில் வெண்ணிறம் காட்டி வண்டுகளையும் ஈக்களையும் கவர்ச்சி செய்வதற்காக என்பது. உசிதம் - பொருத்தம். நிசி - இராத்திரி. செறிவு - அடர்ச்சி, நெருக்கம். உறுகண் - துன்பம். ஏது – காரணம். இலகாதது விளங்காதது, தெரியாதது. இசைவு - பொருத்தம்.