உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

230 திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும் செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி? இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை. 235 அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற் றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்டபின், உலகில் எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள் தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை? 240 இல்லா மாயை என்செய வல்லதாம்? எல்லாம் அவனருள் அல்லா தில்லை. என்னனு பவமிது. மன்னிய இவ்வருள் தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து, நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி 245 இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர் ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்? அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச் சகலமும் செய்வர். அஃதவர் சமாதி.

எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம் 250 அங்கம் கரையநின் றரற்றி “ஐயோ! எம்மையும் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க” எனமொழி குளறி அழுதுவேண் டுவதே அன்றி

விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே.

(சுந்தரமுனிவரும் நடராஜரும் வர; கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க)

சுந்தர: 255 எல்லாம் நடேசரே! உமதுபே ரருளே! அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை இத்தினம் எப்படி முடியும்நீர் இலரேல்?

209

2

எய்ப்பினில் வைப்பு - இளைத்த காலத்தில் உதவுவதற்கு வைத்த பொருள், சேமநிதி. கைப்படு கனி - உள்ளங்கை நெல்லிக்கனி. சமுசயம் - ஐயம். இழுது - நெய். சமாதி - பிரமத்தோடு மனம் ஒன்று பட்டிருக்கும் நிலை. அரற்றி - வாய்விட்டுக் கதறி.