உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

217

நாராயணன் கேட்க, ஐயாயிரம் வீரர்கள் இருப்பதாகவும், இவ் வீரர் களுக்கு ஏற்ற இடம் இது அல்லவென்றும், போர்க்களம் அனுப்பப்பட வேண்டியவர்கள் என்றும் கூறுகின்றனர்.

“வருந்த வேண்டாம். நமக்குக் கொடுத்த பணியைச் செய்வோம்' என்றான் நாராயணன்.

وو

"வேண்டுமென்றே நம்மையெல்லாம் இங்கு வைத்திருக்கிறார் குடிலர்” என்றான் ஒரு சேனைத் தலைவன்.

وو

“கோட்டைக் காவலுக்கு எத்தனை வீரர் வேண்டும் ?” என்று நாராயணன் கேட்க, “இங்குள்ளவர்களில் நாலில் ஒரு பகுதி போதும் என்று விடை கூறுகின்றனர்.

“நல்லது. கால் பகுதியினர் மட்டும் இங்கே கடமை செய்யட்டும். மற்றக் குதிரை வீரர்களை அணிவகுத்துத் தயாராகவை என்று நாராயணன் கட்டளையிட்டான். உதவித் தலைவர்கள் அவ்வாறே செய்தனர்.

கோட்டை வாயிலில் குதிரைமேல் அமர்ந்தபடியே நாராயணன் போர்க்களத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். குடிலன், சாவேறு வீரர்களை அரசன் பக்கத்தில் வைக்காமல் கோட்டைக்குள் வைத்த காரணம், நாராயணனுக்குத் தெரியும். அரசனுக்கு ஏதோ அபாயம் வரப்போகிறது என்பதை அறிந்துதான் நாரயணன் போர்க்களத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் உதவித் தலைவன் குதிரைமேல் அமர்ந்து நிற்கிறான்.

66

போர்க்களத்தில் பாண்டி நாட்டுப் படைபோர் செய்கின்றது. பாண்டியனுக்கு இடது பக்கத்தில் குடிலன் மகன் பலதேவனும் வலப் புறத்தில் குடிலனும் இருந்து போரிடுகின்றனர். போரின் மத்தியில் திடீரென்று ஒரு குழப்பம் காணப்பட்டது. போர்க்களத்தின்மேல் கண்ணுங் கருத்துமாக இருந்த நாராயணன், தனது உதவி வீரனைப் பார்த்து, அரசருக்கு ஏதோ ஆபத்துப்போல் தெரிகிறது. குதிரை வீரர்களை அழைத்துக்கொண்டு விரைவில் என்னைத் தொடர்ந்து வா” என்று கட்டளை யிட்டான். பிறகு, மெல்லிய குரலில், “குடிலனை நம்பாதே" என்று அவன் காதில் சொன்னான். அதற்கு அவ்வீரன், “ஆம். அதை நானும் அறிவேன்” என்று சொல்லி, குதிரைப் படை வீரர்களை அழைத்துக் கொண்டு விரைவாக நாராயணனைப் பின்தொடர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்றான்.