உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

குடிலன் அரசனைப் பார்த்து, “கேட்டீர்களா அரசரே, இக்கெடு பயலின் கொடுமொழியை!" என்று அலறினான். அரசன் வீரனைச் சினந்து, “இவனையும் கழுவில் ஏற்றுங்கள்” என்று அங்கிருந்த சேவகர்களுக்கு ஆணையிட்டான். அப்பொழுது இன்னொரு வீரன், அப்படியானால் பதினாயிரம் கழுமரம் வேண்டும்” என்றான்.

66

இவ்வமயம் வாயில் சேவகன் வந்து, சுந்தர முனிவர் அரண்மனை வந்திருப்பதாகவும், அரசரைக் காண விரும்புவதாகவும் தெரிவித்தான். அரசன் அமைச்சனிடம், "குடிலரே! தண்டனையை நீர் நடத்தும். நம் போய் வருகிறோம்” என்று கூறி எழுந்தான். குடிலன், "இவர்களைவிட்டு விடுங்கள்" என்றான் “விடமுடியாது" என்றான் அரசன். “அப்படி யானால் தாங்களே ஆணையை நடத்துங்கள்” என்றான் அமைச்சன். “நல்லது, நடத்துவோம். நாம் வருகிறவரையில் இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து வையுங்கள் என்று சொல்லி அரசன் முனிவரைக் காணச் சொன்றான்.

وو

அமைச்சன். தன் சேவகனான சடையனை அழைத்து "இவர் களைக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்து வை” என்று கட்டளை யிட்டு உடனே பலதேவனை அழைத்துக் கொண்டு வேகமாய்ப் போய் ஒளிந்துகொள்கிறான். குடிலனுடைய சேவகர்களே மற்றச் சேவகர்கள் துரத்திவிடுகின்றனர். குடிலனைத் தேடுகின்றனர்.

நாராயணன் சேவகர்களை அழைத்துக் குழப்பத்தைத் தடுத்து அமைதி உண்டாக்குகிறான். சேவகர், அரசன் அநீதியாக விதித்த தண்டனைக்காகச் சினங்கொள்கின்றனர். நாராயணன் அவர்களுக்கு ஆறுதல் கூறி அமைதிகொள்ளச் செய்கிறான். குடிலனும் பலதேவனும் ஒளிந்துகொண்டே வெளியில் நிகழ்கிறதைக் கேட்டுக்கொண்டிருக் கின்றனர். அவ்வமயம் ஒரு சேவகன் வந்து அரசன் அழைப்பதாகக் கூறுகிறான். அரசனிடம் குடிலனும் பலதேவனும் போகிறார்கள்.

ஐந்தாம் களம்

அரண்மனையில் சுந்தரமுனிவரை அரசன் சென்று காண்கிறான். போரில் பின்னடைந்து வருந்தும் அரசனுக்கு அவர் ஆறுதல் கூறுகிறார். “புயல்காற்றுக்கு வளைந்து கொடுக்கும் மூங்கில் பின்னர் நிமிர்ந்து நிற்கிறது ; வளையாத நெடுமரம் வேரோடு பெயர்ந்து விழுந்து அழிந்துவிடுகிறது" என்று கூறுகிறார். "மூங்கில், மரத்துக்கு இணையா! அதனை யார் மதிக்கிறார்? ஆணிவேருடன் அற்று வீழ்ந்தாலும்