உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

படைகள்:

பாணர்:

243

ஜே! ஜே!

ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச் செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்! செல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின்நுங்கள் இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே.

படைகள்:

3

ஜே! ஜே!

(படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக)

நான்காம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.

3-ஆம் அடி உறைவிடமா - வெற்றி மடந்தை வாழும் இடமா, விஷம் இருக்கும் இடமா. இவர்வாள் ஏறி இருப்பாள், இவர்களுடைய வாள். மறலி - யமன். வழங்கினோம் - சொன்னோம்.

கலித்தாழிசை 3. ஒல்லும் பொருந்தும். முதல் இரண்டடிகளின் கருத்து: உறையிலிருந்து உருவிய வாள் வெற்றி பெற்றால் அல்லாமல் மீண்டும் உறையில் செல்லாது. அதாவது, சமாதானப் பேச்சு இனி கிடையாது. இல்லவர் - மனைவியர். இற்றது - அறுந்தது.