உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

25

இவர் 1866-இல் இயற்றிய செய்யுள்நூல் The Lost Tales of Miletus என்பது. இதற்கு The Secret way என்று வேறு பெயரும் உண்டு. ஒரு பழைய கதையையே இவர் செய்யுளாகப் பாடினார். இந்தக் கதையைத் தழுவிப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் மனோன்மணீயம் என்னும் இந்த நாடக நூலைக் கற்பித்து எழுதினார். மேல் நாட்டில் வாய்மொழியாக வழங்கிவந்த கதையை லிட்டன் பிரபு செய்யுள் நடையில் வழிநூலாக அமைத்தார். சுந்தரம் பிள்ளையவர்கள். அதன் சார்புநூலாக இந்த நாடக நூலை அமைத்தார்.

தமிழில் நாடகக் கலை

தமிழ்மொழியிலே நாடக நூல்கள் இல்லை என்னும் குறைபாடு உண்டு. இன்றுங்கூட போதுமான நாடக நூல்கள் தமிழில் கிடையா. பழமையான நாடக நூல்களும் இல்லை. இப்படிக் கூறுவதனாலே தமிழர்களுக்கு நாடகக்கலையே தெரியாது என்று கருதுவது தவறு. மூன்று சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்தவர்கள் தமிழர்கள். முத் தமிழில் நாடகத் தமிழும் ஒன்று. நாடகத் தமிழை வளர்த்தவர்களுக்கு நாடகக்கலை தெரியாது என்று கூற முடியுமா? தமிழர் நாடகக்கலையை வளர்த்தனர் என்பதற்குப் பழைய தமிழ் நூல்களிலே போதுமான சான்றுகள் உள்ளன. தொல்காப்பியத்திலே, நாடக நூல்களில் அமைய வேண்டிய எட்டு வகையான சுவைகள், மெய்ப் பாடுகள் முதலியவை கூறப்படுகின்றன. நாடகம் எழுதுவதற்கு இலக்கணமாகச் சில நூல்களும் இருந்தன. அகத்தியம், குணநூல், கூத்தநூல், சந்தம், சயந்தம், செயன்முறை, செயிற்றியம் நூல், முறுவல், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் முதலிய நாடக இலக்கண நூல்கள் இருந்தன. அந் நாடக இலக்கண நூல்களின் சூத்திரங்கள் சிலவும் இப்போதும் நமக்குக் கிடைத்துள்ளன. நாடக இலக்கண நூல்கள் இருந்தன என்றால் நாடக இலக்கிய நூல்களும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? மேலும், அல்லிக்கூத்து, கொடுகொட்டி, குடைக்கூத்து, குடக்கூத்து, பாண் டரங்கம், துடி, கடயம், மரக்காலாடல் முதலிய கூத்துக்களையும் உலகப் புகழ்பெற்ற பரத நாட்டியத்தையும் வெகு சிறப்பாக வளர்த்துப் போற்றிய தமிழர், அவைகளோடு தொடர்புடைய நாடகக் கலையை யும் நன்கு வளர்த்தார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

தமிழர் நாடகக்கலையை வளர்த்தார்கள் என்றால், தமிழில் நாடக நூல்கள் ஏன் இல்லை? இந்தக் கேள்விக்கு விடை என்ன? பழைய