உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

15 ஏவலின் படியாம் எண்ணா யிரவர்

20

ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம். ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்?

இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ! செவ்விது! செய்ததென்?

எவ்விதம் செப்புகேன்?

நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம். போரிடைக் கண்டனை நாரணர் தம்மை.

மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்? ஐய! யான் அறிகிலன். அவரிலும் நமக்கு மெய்ம்மையர் யாவர்? வேலியே தின்னில் 25 தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர்.

துரோகம்! துரோகம்!

துரோகமற் றன்று!

விரோதம்! அடியேன் மேலுள விரோதம். திருவடி தனக்கவர் கருதலர் துரோகம்.

கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில். 30 மடையன்! ஐயோ! மடையன்! சுவாமீ!

எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது. விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி ஆயின், திருத்தமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில்

267

ஆதியர் - சிறந்தவர். அடி 24 - 25: 'வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி' என்னும் பழமொழியைக் கூறுகின்றது. அடி 31 - 32. “எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல" என்னும் பழமொழியைச் சுட்டுகிறது. “எலியெ சிற்றிச்சு இல்லம் சுட்டால் எலி சாடியும் போம், இல்லம் வெந்தும் போம்” என்பது மலையாள நாட்டுப் பழமொழி.