உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

2-ம் சேவ:

குடி:

75

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி: ஜீவ:

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

அடியேன்! அடியேன் -

(2-ஆம் சேவகன் போக)

சென்றது செல்லுக, ஜயிப்போம் நாளை.

ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். கெடுநா உடையான். கேட்டினி என்பயன்?

விடுவேம் அல்லேம். வெளிப்படை. கேட்பதென்? எழுமுன் அவன் கழு ஏறிடல் காண்குதும்.

தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை!

எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம்பொறுக்கிலம். எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்!

சுத்தன்!

சுத்தனோ? துரோகி! துட்டன்!

(நாராயணன் உள்ளே வர)

இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே? (முருகன் முதலியோர் வாயிலில் நிற்க)

85 எப்போ திறைவ?

நாரா: ஜீவ:

நாரா:

ஜீவ:

நாரா:

ஜீவ:

இன்று போர்க் கேகுமுன்!

அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை. கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன்.

குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்!

குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன்.

90 கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி!

குடிலனென் அமைச்சன்.

குடிலனைக் குடிலன் என்றே கொண்டேன் - குடிலனை வஞ்சகன் என்றே கருதினேன் என்பது கருத்து. (குடிலன் -வஞ்சகன்). பகடி - கேலி, பரிகாசம்.