உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

நாடக இலக்கணம்

கதைகளை நாடகங்களாக அமைப்பதற்குச் சில இலக்கண மரபு உண்டு, நாடகம் எழுத வேண்டுமானால், பொதுவாகக் கதையை ஐந்து வகுப்பாகப் பிரிக்க வேண்டும். இந்த ஐந்து பெரும் பிரிவுக்கு அங்கம் என்பது பெயர். அங்கத்தைச் சந்தி என்றும் கூறுவர். பிறகு, ஒவ்வொரு அங்கமும் (சந்தியும்) களம் என்னும் உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். கதையின் அமைப்புக்கு ஏற்பக் களங்கள் சிலவாகவும் பலவாகவும் அமையும். ஆனால் அங்கம் அல்லது சந்தி ஐந்தாகத்தான் இருக்கவேண்டும். இது தமிழ் மரபு மட்டும் அல்ல ; வடமொழி நாடக மரபும் மேல்நாட்டு நாடக மரபும் ஆகும். வடமொழி நாடகங்களும், உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் நாடகங்களும் ஐந்து சந்திகளாகவே (அங்கங்களாகவே) பிரிக்கப்பட்டுள்ளன. (ஒரோவழி, வெகு அருமையாக, நாடகங்கள் ஏழு சந்திகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. னால் இது விதி விலக்கு.)

முதல் சந்தியை முகம் என்றும், 2-ஆம் சந்தியைப் பிரதிமுகம் என்றும், 3-ஆம் சந்தியைக் கருப்பம் என்றும், 4-ஆம் சந்தியை விளைவு என்றும், 5-ஆம் சந்தியைத் துய்த்தல் என்றும் கூறுவர். அதாவது, நாடகத்திலே, கதையின் அமைப்பு இவ்வாறு அமைய வேண்டும். நிலத்தை உழுது பண்படுத்தி விதைப்பது போன்றது முதல் சந்தியாகிய முகம். இதில் கதையின் தொடக்கம் காட்டப்படும். பயிர் வளர்ந்து பெரிதாவது போல, கதையின் இரண்டாவதாகிய பிரதிமுகம் அமையவேண்டும். மூன்றாவது அங்கத்தில் (சந்தியில்), பயிர் விளைந்து கதிர் விடுவதுபோல, கதையின் முக்கிய கட்டம் தோன்றவேண்டும். பயிர் முற்றிப் பழுப்பதுபோல கதையின் கருத்து வெளிப்படுவது நான்காவ தாகிய விளைவு என்னும் சந்தியில் அமையவேண்டும். பயிரை அறுவடை செய்து உண்பதுபோல, கதையின் கருத்து முழுவதும் வெளிப்படுவது துய்த்தல் என்னும் ஐந்தாவது சந்தியாகும்.

இவ்வாறு வயலில் பயிரின் வளர்ச்சி படிப்படியாகக் காணப்படுவது போல, நாடகத்தில் கதையின் வளர்ச்சியைப் படிப்படியாக ஐந்து அங்கங்களில் அமைத்துக் காட்டவேண்டும், பிறகு, நாடக உறுப்பினரின் பேச்சிலும் நடிப்பிலும் எட்டு வகையான (ஒன்பது வகை என்றும் கூறுவர்) சுவைகளும், (இரசங்களும்), மெய்ப்பாடுகளும் தோன்றும்படி நாடகம் எழுதப்படவேண்டும். (இவைபோன்ற நாடகக் கலைச்