உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

திருவடி, கற்பனை, சாடு திருமேனி, திருவாணை, மாற்றொலி, வெள்ளம் முங்கி, யதார்த்தம், பரசியம் முதலியன மலையாள மொழியில் வழங்குகிற சொற்கள்.

தென்பாண்டி நாடே சிவலோகமாம், வார்கடல் உலகில் வாழ்கிலன். இவை திருவாசகச் சொற்றொடர்கள்.

சுந்தரம் பிள்ளையவர்கள், கோடகநல்லூர் சுந்தரசுவாமி என்பவரைத் தனது சமய குருவாகக் கொண்டிருந்தார். அவரையே, இந்த நாடகத்தின் ஜீவக அரசனுடைய குலகுருவாக இருத்தி அவர் பெருமையைக் கூறுகிறார்.

ஆலிவர் கோல்ட் ஸ்மித் (Oliver Goldsmith) என்னும் ஆங்கிலக் கவிவாணர் எழுதிய The Vicar of Wakefield என்னும் நவீனத்தில் Edwin and Angelina, A Ballad என்னும் செய்யுளைத் தழுவி, சுந்தரம் பிள்ளையவர்கள் சிவகாமி சரிதை என்னும் பெயரினால் செய்யுள் புனைந்தார். அதனை மனோன்மணீயத்தில் புகுத்தியுள்ளார். இதன் ஆங்கில மூலத்தையும், மனோன்மணீயக் கதையின் மூல நூலாகிய லிட்டன் பிரபு இயற்றிய The Lost Tales of Miletus அல்லது The Secret way என்னும் ஆங்கிலச் செய்யுளின் மூலத்தையும் இந் நூலின் இறுதியில் அநுபந்தமாகச் சேர்த்துள்ளோம். இவை, மூலச் செய்யுள்களை ள ஆராய்ச்சி செய்வோருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

6

6

மனோன்மணீய நாடக நூலுக்கு விளக்கமான குறிப்புரை எழுத வேண்டுமென்று சென்னை சாந்தி நூலகத்தார் கேட்டுக் கொண்டபடி என்னால் இயன்ற அளவு இவ்வுரையை எழுதியுள்ளேன். குற்றங்களைக் களைந்து குணத்தைக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ் வாய்ப்பினை அளித்த சாந்தி நூலகத்தாருக்கு எனது நன்றியுரியது. மயிலாப்பூர், சென்னை-4

2. 1. 1961

மயிலை சீனி. வேங்கடசாமி