உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

அருள்செய்வீரானால், தாங்கள் விரும்பியதுபோல நீரும் தாரும் என் தலைமேல் சுமந்துகொண்டு தங்கள் வாயிலில் கொண்டுவந்து தருவேன். இராமன் வென்ற இலங்கையை விபீஷணன் காத்ததுபோல பாண்டிநாட்டைக் காத்திடுவேன்!

புருடோத்தமன், இவன் தந்திரசாலி, சாமர்த்தியமாகப் பேசுகிறான் என்று எண்ணிக்கொள்கிறான்.

குடிலன், “அரசனுடைய அந்தப்புரந்துக்குப் போக ஒருவரும் அறியாத ஒரு சுரங்கவழி உண்டு. அவ்வழியாய்ப் போனால் அர- சனைச் சிறைப்பிடிக்கலாம்” என்றான்.

புருடோத்தமன், “உண்மைதானா?” என்று கேட்டுக்கொண்டே, “யார் அங்கே....” என்று அழைத்தான். சற்றுத் தூரத்திலிருந்து சேனாபதி அருள்வரதன் விரைந்து வந்து வணங்கினான், “கைகால்களுக்குத் தளையிட விலங்குகள் கொண்டுவா” என்றான் புருடோத்தமன்.

குடிலன்: “அரசர்பெருமானே! அடியேன் கூறுவது முழுவதும் உண்மை.” “சுரங்கவழி எங்கே இருக்கிறது? நீ அவ்வழி யாகத்தான் வந்தாயோ?” என்று கேட்டான் சேரன்.

66

‘அருகிலேயே இருக்கிறது. அவ்வழியாகத்தான் வந்தேன் என்றான் குடிலன்.

66

அருள்வரதன் சில வீரர்களுடன் விலங்குகளைக் கொண்டு வர, சேரன் குடிலனைச் சுட்டிக்காட்டி, “பூட்டுங்கள்!” என்று ஆணையிட்டான். வீரர்கள் குடிலனுக்கு விலங்கு பூட்டினார்கள். அரசே! நான் ஓட மாட்டேன். எனக்கேன் விலங்கு? அருள்கூர்ந்து எனக்கு வாக்களியு ங்கள்” என்று வேண்டினான் குடிலன்.

சேரன், “வாயை மூடு ! சேரன் வஞ்சமாக வெல்லமாட்டான்! போர்க்களத்திலே அரசர்களை வென்று சிறைப்பிடிப்பான்... நல்லது, நட. "சுரங்க வழியைக் காட்டுக" என்று கட்டளை யிட்டான். குடிலன் சுரங்க வழியைக் காட்டி முன்நடக்க, சேவகர்களும், அருள்வரதனும், புருடோத்தமனும் பின் தொடர்ந்து சென்றனர்.

இரண்டாம் களம்

அரண்மனையில் கன்னிமாடத்தில் ஊழியப் பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அரசன், இளவரசியைப் பல