உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

புருடோத்தமன்: (பாட)

(குறள்வெண் செந்துறை)

உண்ணினைவில் ஒருபோதும்

ஓய்வின்றிக் கலந்திருந்தும் உயிரே என்றன்

கண்ணிணைகள் ஒருபோதும்

கண்டிலவே நின்னுருவம்

காட்டாய் காட்டாய்.

அவத்தைபல அடையுமனம் அனவரதம் புசித்திடினும் அமிர்தே என்றன்

செவித்துளைகள் அறிந்திலவே

தித்திக்கும் நின்னாமம்

செப்பாய் செப்பாய்.

பொறிகளறி யாதுள்ளே

புகும்பொருள்கள் இலையென்பர்

பொருளே உன்னை

அறியவவா வியகரணம்

அலமாக்க அகத்திருந்தாய்

1

2

அச்சோ அச்சோ.

3

(புருடோத்தமன் சற்றே அகல)

குடி:

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

(தனிமொழி)

40 மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்!

தேவரும் உளரோ? யாதோ? அறியேன். இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம்

கு. செந்துறை-1. உண்ணினைவில் - மனக் கருத்தில்.

2. அனவரதம் - எப்போதும்.

3. பொறிகள் - ஐம்பொறிகள். கரணம் - அந்தக்கரணம்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள். அலமாக்க - அலைய, கலங்க. அச்சோ - அந்தோ.