உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

மனோ:

வாணி:

கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே!

பேதைமை அன்றோ ஓதிய சபதம்? 160 ஏதிது வாணி! என் மணம் தனக்கோ

இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே.

உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் 165 கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே.

323

1

(இருவரும் போக)

ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.

வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் - குடம். படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து.