உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

343

துருவாச முனிவர் தேவேந்திரனுக்கு ஒரு மலரைக் கொடுக்க அவன் அதை வாங்கித் தான் ஏறியிருந்த ஐராவதயானையின் தலையில் வைத்தான். அந்த யானை அந்தப் பூவைத் தும்பிக்கையினால் எடுத்துத் தன் காலில் வைத்துத் தேய்த்தது. அதுகண்டு சினந்த துருவாச முனிவர் அவனை வேடனாகும்படி சபித்தார். இந்திரன் அச் சாபத்தினால் காட்டில் வேடனாகத் திரிந்தான் என்பது மற்றொரு கதை.

இந்திரன் அகலிகையைக் கற்பழித்த காரணத்தினால், கௌசிக முனிவர் அவன் உடம்பு முழுவதும் பெண்குறியாகக் கடவது என்று சபிக்க, அச் சாபம் ஏற்ற இந்திரன் வெட்கி வெளியே வரமுடியாமல் மறைந்து வாழ்ந்தான் என்பது இன்னொரு கதை.

பக்கம் 97

கடலில் அமுதம் தோன்றிய கதை

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பை மத்தைக் கடையும் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமும் இருந்து கடைந்தபோது, அப் பாற்கடலிலிருந்து அமுதம் தோன்றியது. அமுதம் எடுக்கத் தேவர்களோடு உழைத்த அசுரர்களுக்கு உரிய பாகத்தைக் கொடுக்காமல், தேவர்கள் வஞ்சனையாக அதை எடுத்துக் கொண்டு போய்த் தாங்கள் மட்டும் அருந்தினார்கள். அமுதத்தை அருந்தியபடியால் நோயின்றி நெடுங்காலம் வாழ்ந்தார்கள்.

பக்கம் 126

பாம்பு சந்திரனை விழுங்கிய கதை

பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அமுதம் கிடைத்தது. அந்த அமுதத்தைத் தம்முடன் உழைத்த அசுரர்களுக்குப் பங்கு கொடுக்காமல் கொண்டுபோய்த் தேவர்கள் மட்டும் பகிர்ந்து சாப்பிட் டார்கள். அப்போது இராகு கேது என்னும் இரண்டு அசுரர்கள் தேவர்கள் போல உருவம் கொண்டு தேவர்கள் அமுதம் சாப்பிடுகிற பந்தியில் போய் உட்கார்ந்தார்கள். இதையறிந்த சூரியன் சந்திரனாகிய தேவர்கள். அமுதத்தைப் பங்கிடுகிற விஷ்ணுவினிடம் குறிப்பாகத் தெரிவித்தார் கள். விஷ்ணு அவர்களை அடித்துத் துரத்தினார். அதனால், சூரிய சந்திரர்களின்மேல் பகைகொண்டு இராகு கேதுக்களாகிய அசுரர்கள்