உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

6

அவர்கள் எழுதியுள்ளவை

இணைக்கப்படுகின்றன.

தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு: களப்பிரர் துளு நாடு

377

இத்தொகுதியில்

இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளி பாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத் தொகுதியில் இடம்பெறுகின்றன.

தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்:

வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு

மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய ப பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுதி - 5 : பண்டைத் தமிழகம்:

ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்

தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில்

சேர்க்கப்பட்டுள்ளன.

தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்:

காலஆராய்ச்சி இலக்கிய ஆராய்ச்சி

பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்து கால ஆய்வுகள் இத்