உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

உயிர் விடுத்தேனும் நீக்கத் துணிவுகொண்ட ஜீவகன் அதற்குடன் படாமல் மறுத்துவிட்டு, பின்னும் சமருக்கே யத்தனித்துத் தன் அரண்களைச் சோதித்து நோக்குங்கால் அவை ஒருநாள் முற்றுகைக் கேனும் தகுதியற்று அழிந்திருப்பதைக் கண்ணுற்று, அவ்வளவாகத் தன் படைமுற்றும் தோற்க நேரிட்ட காரணம் வினவலாயினான். தன் கருத்திற் கெதிராக அரசனைக் காப்பாற்றி வரும் நாராயணன்மேற் றனக்குள்ள பழம்பகை முடிக்க இதுவே தருணம் எனக் கண்டு அரண் காவலுக்கு நியமிக்கப்பட்ட நாராயணன் காவல் விடுத்துக் கடமைமீறி யுத்தகளம் வந்ததே காரணமாகக் காட்டிக் கோபமூட்டிப் படையிற் பிறந்த குழப்பத்திற்கு ஏதுவாகப் பல தேவனை ஒரு சேவகன் வேலாற் றாக்கினதும் தெரிவித்து, அதுவும் வியூகத் தலைவனாக ஆக்கப் பெறாத பொறாமையால் நாராயணன் ஏவிவிட்ட காரியமே எனவும் அத் தொழிலுக்குப் பரிசாக அவன் அரண்மனையினின்றும் திருடிக் கொடுத்ததே அவன் கையிலிருந்த அரண்மனை முத்திரை பொறித்த பொற்றொடி எனவும் குடிலன் ஒரு பொய்க் கதை கட்டி அதனை அரசன் நம்பும்படி செய்தான். அவ்வாறே களவு கொலை ஆஞ்ஞாலங்கனம் முதலிய குற்றங்களை நாராயணன்மேற் சுமத்தி அவற்றிற்காக அவனைக் கழுவேற்றும்படி விதியும் பிறந்தது.

இத்தருணத்தில் சுந்தர முனிவர் அத்தியந்த ஆவசிகமான ஓரிரகசியாலோசனைக்கு அரசனை யழைப்பதாகச் செய்தி வந்தமை யால் நாராயணனை அவ்விதிப்படி கழுவேற்றவில்லை. முனிவர் இப்போது வந்த காரணம் என்னவென்றால், ஜீவகன் குடிலன் வசத்தனாய், நெல்வேலிக் கோட்டையே சாசுவதமென இறுமாந் திருந்தமை கண்டு பரிதாபம் கொண்டு, தமக்கென இரந்து வேண்டிக் கொண்ட அறைமுதல், தமதாச்சிரம வெளிவரையும், ஆபத்காலோப யோகமாக அதிரகசியமான ஒரு சுருங்கை உழைத்துச் சமைத்துக் கொண்டு, பற்றுக் கோடற்று நின்ற ஜீவகனையும் அவன் மகளையும் கேடுற்ற கோட்டையினின்றும் தமது ஆச்சிரமத்திற்கு அச் சுருங்கை வழி யழைத்துச் செல்ல வுன்னியே சுந்தரர் இத்தருணம் எழுந்தருளினர். கோட்டையின் நிலையாமையுணர்ந்தும் அதின் மேல் வைத்த அபி மானம் ஒழியாமையால் அஃதுடன் தான் முடியினும் இன்னும் ஒரு முறை போருக்கஞ்சிப் புறங்கொடுத்தல் தகாதென ஜீவகன் துணிந்து மறுக்க, மனோன்மணி, பாண்டியர் குலத்திற்கு ஏக சந்ததியாக இருப்ப தனால் மற்றையர் எக்கேடுறினும் அவளையேனும் காப்பாற்றுதல் தம்