உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

41

விரும்பிக் கேட்டுக் கொண்டனள். அப்படியே ஜீவகன் அனுமதி கொடுத்து அக மகிழ்ந்து மணவினைக்கு ஆயத்தம் செய்யவே, நடுநிசி சமீபிக்க முனிவரும் நடராஜனும் வந்து சேர்ந்தார்கள். தாம் போய் மீளுவதற்குள்ளாக குடிலன் செய்த துராலோசனையும், அதற் குடன்பட்ட மன்னவனுடைய ஏழைமையும், கருணாவிலாசம் இருந்தமையும் கண்டு வியந்து, அரசன் நிச்சயித்தவண்ணமே நடத்தச் சுந்தரர் இசைந்தார்.

கற்படைக் கருகில் உள்ள மணவறையை விவாக முகூர்த்தத்திற் கிசைந்தவாறு அலங்கரித்து, அதில் குடிலன் ஒழிய மற்ற மந்திரிப் பிரதானிகளுடன் முனிவர் ஜீவகன் நடராஜன் பலதேவன் நாராயணன் முதலிய அனைவரும் கூடிக் குடிலன் வரவிற்குச் சற்று எதிர்பார்த் திருந்தும் வரக்காணாமையால் மணவினைச் சடங்குகள் தொடங்கி, பல தேவனுக்கு மாலைசூட்ட மனோன்மணியை வரவழைக்கும் எல்லை, குடிலன் வழிகாட்ட கற்படை வழிவந்த புருடோத்தமனும் முனிவ ரறையில் வந்து சேர்ந்து அடுத்த அறையாகிய மணவறையில் நடக்கும் ஆகோஷம் என்னவென்று நோக்கவே, தன் திரைவிட்டு, வெளிவந்து பலதேவ னெதிரே மணமாலையும் கையுமாய்ச் சித்திரப் பிரதிமை போல உணர்வற்றுச் செயலற்று நின்ற தன் காதலியாகிய மனோன் மணியைக் கண்ணிரண்டும் களிக்கக் காணலும், பள்ளத்துட் பாயும் பெருவெள்ளம்போல் அவாப் பெருகி யீர்த்தெழ, திடீரென்று கடிதிற் குதித்து யாரும் அறியாது சபையுட் புகுந்து கையற்ற சோகத்தால் மன மிறந்து நின்ற மனோன்மணிதன் கண்முன் சென்று நின்றனன். தன்னுள்ளத்திருந்த தலைவன் இங்ஙனம் பிரத்தியக்ஷப்படலும் அக்கணமே ஆனந்தப் பரவசப்பட்டு மனோன்மணி,தான் கைக் கொண்ட மணமாலையை அவன் கழுத்தோடு சேர்த்துத் தற்போதமிழந்து அவன் தோண்மேல் வீழ்ந்து மூர்ச்சை யாயினள். இங்ஙனம் அயலான் ஒருவன் சபையுட் புகுந்ததும், மனோன்மணி அவனுக்கு மாலைசூட்டி மூர்ச்சித்ததும் கண்டு ஜீவகனாதியர் திடுக்கிட்டுச் சூதெனக் கருதிப் பொருதற் கெழுங்கால், சந்தர முனிவர் கையமைத்துச் சமாதானம் பிறப்பிக்கப் புருடோத்தமன், குடிலன் தன்னிடத்தில் வந்து கூறிய துரோகச் சிந்தனையும் தான் அதற்கிசையாது அவனையே கால் யாப்பிட்டு ஜீவகனுடன் ஒப்புவிக்கக் கொணர்ந்தமையும் கூறிக் குடிலனை விலங்கும் காலுமாகச் சபை முன் நிறுத்திவிட்டு, தனக் குயிர்நிலையா நின்ற மனோன்மணியுடன் தன் பாசறைக்கு மீள