உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு:

மனோன்மணியம் நாடகம்

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மனோன்மணியம் நாடகத்தை 1961 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். இந்நூல் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடப்புத்தகமாக இடம்பெற்றிருந்தது. இந்தப் பின்புலத்தில் இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பதிப்பித்து மாணவர்களின் தேவைக்காக வழங்கியுள்ளார் என்று கருத முடியும். இந்நூலுக்கு மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ள முன்னுரையில் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை குறித்த விரிவான பதிவுகளைச் செய்துள்ளார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் புலமை குறித்து அறிவதற்கு இம்முன்னுரை பெரிதும் உதவுகிறது.

தமிழில் நாடகக் கலை எவ்விதம் உருவானது என்பது தொடர்பான ஆய்வுரையையும் இம்முன்னுரையில் காணமுடிகிறது. மனோன் மணியம் நாடகம் தமிழில் முதல் நாடகமாகப் பலரும் கருதுவதைப் போல் இவரும் கருதியுள்ளார். செய்யுள் வடிவில், காவியமரபில், அங்கம் மற்றும் களம் என்னும் பிரிவுகளோடு மனோன்மணியம் எழுதப்பட்டிருப்பதால் இதற்கு நாடக நூல் என்ற அங்கீகாரம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நூலின் செய்யுள் நடை கூடுதலான காவிய மரபாகவே அமைந்திருப்பதைக்