உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ: குடி:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

காவலா! அவனைப் போலயான் கண்டிலன்; சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான், தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்; எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில் 115 அங்கங் கதனையே நோக்கி நோக்கித்

தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன். பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்: ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன். பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?

120 ஆமாம்! யாமும் கண்டுளேஞ் சிலகால் நின்றால் நின்ற படியே; அன்றி

இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம். சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே. அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ...

125 அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன்.

அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே. எங்கவன் இப்போது?

இங்குளன் என்றனர்.

சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன் நின்றான். இதந்தரு நின்கட் டளையெப் படியோ?

130 மெத்தவும் நன்மை; அப்படி யேசெய்.

சித்தம்; ஆயினுஞ் செல்கிலன். முனிவர் பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்?

பெயர்ந்திலன் - போகவில்லை.