உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

குடி:

ஜீவ:

185 எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியோம்; பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்.

ஏது மறியாப் பேதை! நேற்றுத்

தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக் காதனோய் காணவோ ரேதுவு மில்லை. 190 எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ வந்தே காண்குதி மன்னவ ரேறே!

ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலள். இதுவென் புதுமை? என்செய் கோயான்?

தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற

195 வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்

செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்; நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம் அறியலாந் தகைத்தோ?

வறிதவ் ஐயம்.

மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி 200 அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்; ஆசி பேசியங் ககலுங் காலை

ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர் அறையுட னங்கணந் திறவுகோ லோடு தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே.

205 நமக்கதி னாலென்? நாமறி யாததோ என்னோ அறியேன் இந்நோய் விளைவு?

குடி:

(தனதுள்)

79

(ஜீவகனும் செவிலியும் போக)

யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்? அவ்வள வறிவி லாரோ முனிவர்?

சேர அரசனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கும் படி சோதிடர் கூறினார்கள் என்பது கருத்து.

ஏது - காரணம். ஐயம் - சந்தேகம். ஜனிக்கும் - உண்டாகும். மாற்றம்

சொல். அங்கணம் - முற்றம்.