உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

97

கூறுவான். இந்தக் கஷ்டங்களை எல்லாம் உணராமல், பித்துக்கொள்ளி நடராஜனைத் தூது அனுப்பும்படி நமது குருநாதர் கூறுகிறார்' என்று சொன்னான். ‘அரசர் பெருமானே! அவருக்குத் தெரிந்தது அவ்வளவு தான். துறவி குளத்தை வெட்டு என்று சொல்லத் தெரியுமே தவிர அரச தந்திரம் அவர்களுக்குத் தெரியாது. அரசர்களிடம் தூதுசெல்ல நடராஜனுக்கு என்ன தகுதி உண்டு? பெண்களிடம் தூதுசெல்லத் தகுதி யுடைவன் அவன்' என்றான் குடிலன். காலம் கடத்தாமல் உடனே பலதேவனைத் தூது அனுப்புக என்று அரசன் கூற 'கட்டளைப்படியே இன்றே அனுப்புகிறேன்' என்று கூறி விடைபெற்றுச் சென்றான் அமைச்சன்.

தனித்து அமர்ந்திருக்கும் பாண்டியன், 'கூர்த்த மதியுள்ள குடிலனை நமது அமைச்சனாகப் பெற்றது நமது பாக்கியம்' என்று தனக்குள்ளே பேசிக் கொள்கிறான். அவ்வமயம் நகரப் பிரபுக்கள் சிலரும் நாராயணனும் அவ்விடம் வருகிறார்கள். அரசன் அவர்களிடத்திலும் தன் அமைச்சனைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான். சற்று முன்புதான் நமது அமைச்சருடன் இராஜீய காரியமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய அறிவே அறிவு என்று அரசன் புகழ்ந்து கூறுகிறான். ‘இதனைக் கேட்ட பிரபு ஒருவர், ‘அதற்கென்ன ஐயம்! குடிலனுடைய அறிவுக்கு எல்லை யுண்டா? தேவகுருவும் அசுரகுருவுங்கூட இவரிடம் வந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றார். குடிலனுடைய அறிவும் திறமையும் அரசருக்குத் தீமை பயக்கும் என்று நாராயணன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். மற்றொரு பிரபு, 'அரசர் பெருமானிடத்திலும் அரச குடும்பத்தினிடத் திலும் அமைச்சருக்கு இருக்கிற பக்தி சொல்லி முடியாது. இராமரிடம் அனுமானுக்கு இருந்த பக்தி போன்றது அவருடைய பக்தி’ என்று மெச்சிப் பேசினார். 'இதுவும் முழுப் பொய். அரசர் இதனையும் உண்மை என நம்புவார்' என்று தனக்குள் பேசிக் கொண்டான் நாராயணன்.

அவ்வமயம் அங்கிருந்த சேவகர், அரசனை வணங்கித் தன் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றிக்காட்டி, 'அரசர் பெருமான் நேற்று அடியேனிடம் திருமுகம் கொடுத்து அனுப்பியபோது, திருமணச் செய்தியையறிந்து மகிழ்ச்சியடைந்து அதற்கு அடையாள மாக இந்த முத்துமாலையை அமைச்சர் அடியேனுக்கு வெகுமதியாக அளித்தார்’ என்று கூறினான். இதைக் கேட்டு, ஏதோ பொல்லாங்கு அரசருக்குச் செய்ய எண்ணியிருக்கிறான் என்பது இதனால் நன்கு தெரிகிறது என்று தனத்குள் சொல்லிக்கொள்கிறான் நாராயணன்.