உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு

249



தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்:

காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி

பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்த காலஆய்வுகள் இத்தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங்கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன.


தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்:

சமணம்

‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறுபல கட்டுரைகள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்

பௌத்தம்

‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.