உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


புராணம்) அறிகிறோம். 'ஆர் கொண்ட வேற்கூற்றன் களந்தைகோன் அடியேன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத் தொண்டத்தொகையில் இவரைக் கூறுகிறார். இவர் களப்பாளன் (களப்பிரன்) குலத்தவர் என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி கூறுகிறார் (திருத்தொண்டர் திருவந்தாதி 47).

நாதன் திருவடியே முடியாகக் கவித்து நல்ல போதங் கருத்திற் பொதிந்தமை யாலதுகை கொடுப்ப ஓதந்தரு வியஞான மெல்லாம் ஒரு கோலின் வைத்தான் கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே

களப்பிர அரசர்கள் பொதுவாகச் சைன சமயத்தவர் என்றாலும், அவர் குலத்தைச் சேர்ந்த கூற்றுவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். சோழநாட்டிலிருந்த இவர், சோழ அரசர்களுடைய முடியைத் தரித்து அரசாள வேண்டும் என்று விரும்பினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பழைய சோழ அரச பரம்பரையார் களப்பிரருக்குக் கீழடங்கியிருந்தார்கள். அவர்களுடைய முன்னோரான சோழர் அணிந்திருந்த மணிமுடி தில்லை வாழ் அந்தணர்களிடத்தில் இருந்தது. 'முடிஒன்று ஒழியஅரசர் திருவெல்லாம்' உடையராக இருந்த கூற்றுவர், சோழ அரசருடைய பழைய முடியைத் தரித்து அரசாள விரும்பினார். அவர் சோழ அரசருடைய முடியைக் கொண்டு தனக்கு முடிசூட்டும்படி கேட்டார். அவர்கள், 'சோழ அரசர் குடியில் பிறந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு முடி சூட்டமாட்டோம்' என்று சொல்லி, சோழர் முடியைத் தம்மில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர் எல்லோரும் சேர நாட்டுக்குப் போய்விட்டார்கள் (கூற்றுவ நாயனார் புராணம் 4, 5). மல்லல் ஞாலம் புரக்கின்றார்

மணிமா மவுலி புனைவதற்கு

தில்லைவா ழந்தணர் தம்மை

வேண்ட அவரும் 'செம்பியர் தம்

தொல்லை நீடுங்குல முதலோர்க்

கன்றிக் கட்டோம்முடி' என்று

நல்கா ராகிச் சேரலன்தன்

மலைநா டனைய நண்ணுவார்