உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


கொண்டு இது கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கூறி ஒரு கட்டுரை எழுதினார் (Rev. H. Heras, Journal of the Royal Asiatic Society, January 1934). ஹீராஸ் அடிகள் கூறியதே சரி என்று ஏற்றுக்கொள்ளப் பட்டது. அடிகளுடைய மாணவரான டாக்டர் எம். ஆரோக்கியசாமி அவர்கள் தாம் எழுதிய வெள்ளாறு வட்டாரத்தின் பழைய வரலாறு என்னும் நூலில், மூவர் கோவில் சாசனம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டது என்று கொண்டார். இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற இருக்குவேள் அரசர்களில் பரதுர்க்க மர்தனன் என்பவன் வாதாபிஜி (வாதாபி நகரத்தை வென்றவன்) என்று கூறப்படுகிறான். சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியோடு போர்செய்து வென்று அவனுடைய வாதாபி நகரத்தைக் கைப்பற்றின முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் (மாமல்லன் காலத்தில்) இந்தப் பரதுர்க்கமர்தனன் இருந்தான் என்பதும், இவன் நரசிம்மவர்மன் சார்பாகப் புலிகேசியோடு போர் செய்து வாதாபியை வென்று 'வாதாபிஜித்' என்று பெயர் பெற்றான் என்பதும் தெரிகின்றன. வாதாபி நகரம் கி.பி. 642ஆம் ஆண்டில் வெல்லப்பட்டது என்பதை வரலாற்றாசிரியர் யாவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆகவே, இருக்குவேளாகிய பரதுர்க்க மர்த்தனன் கி.பி. 642இல் இருந்தவன் என்பதில் சற்றும் ஐயமில்லை. இவனுடைய காலத்தை அடிப்படையாகக் கொண்டு இவனுக்கு முன்னும் பின்னும் இருந்த இருக்குவேள் அரசர் காலங்களை ஒருவாறு அறியலாம். தலைமுறை யொன்றுக்கு 30 ஆண்டு என்று கணக்கிட்டால் கீழ்வருமாறு இவர்களின் காலம் தெரிகிறது:

இருக்குவேள் அரசர் உத்தேசமான காலம் கி. பி.

1. இருக்குவேள் (பாண்டியனுடைய யானைப்படையை முறியடித்தவன்; இவனுடைய பெயர் கல்வெட்டில் மறைந்துவிட்டது) 435-465 2. பரவீரஜித்து 465-495 3. வீரதுங்கன் 495-525 4. அதிவீரன் 525-555 5. அநுபமன் (சங்ககிருத்து) 555-585 6. நிருப கேசரி 585-615 7. பரதுர்க்கமர்த்தனன் 615-645 8. சமராபிராமன் 645-675