உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


அவர்கள் (கி.மு. 29) மாதிட்டைத் துறையில் இறங்கினார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகா. XXXIII : 39). அந்தத் தமிழர்கள் வட்டகாமணி அரசனை வென்று சிங்கள நாட்டைப் பன்னிரண்டு ஆண்டு (கி.மு.29-17) வரையில் அரசாண்டார்கள்.

மாதிட்டை பிற்காலத்தில் மாதோட்டம் என்று பெயர் கூறப் பட்டது. தேவாரத்தில் மாதோட்டம் என்று கூறப்படு கின்றது. மாதோட்டத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல் உள்ள திருக்கேதீச் சுரத்தைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மாதிட்டையாகிய மாதோட்டம் மிகப் பழங்காலத்திலிருந்து முக்கியமான துறைமுகப் பட்டினமாக இருந்தது.