130
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
'இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை’
(அகம்.130:9-11)
உப்பு வாணிகப் பெண்கள் கொற்கைக் கடற்கரைக்கு வந்து உப்பு வாங்கின பொது அவர்கள் வளர்த்த குரங்குகளும் அவர்களின் சிறுவர்களும் கிளிஞ்சில்களின் உள்ளே முத்துக்களையிட்டுக் கிலி கிலியாடினார்களாம்!
'நோன்பகட் டுமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளம்பூம் புதல்வரொடு கிலி கிலி யாடும் தத்துநீர் வரைப்பிற் கொற்கை'
(சிறுபாண், 55-62)
இதிலிருந்து கொற்கைக் குடாக் கடலில் முத்துக்கள் மலிந் திருந்தன என்பது தெரிகின்றது.
மகளிர் கால்களில் அணிகிற சிலம்பு என்னும் அணியின் உள்ளே சிறுசிறு கற்களைப் பரல் கற்களாக இடுவது வழக்கம். கொற்கைக் கடலில் முத்துக்கள் அதிகமாகக் கிடைத்தபடியால் பாண்டிய அரசருடைய அரச குமாரிகள் அணிந்த சிலம்புகளிலே முத்துக்களைப் பரலாக இட்டிருந்தனர். ஆரியப்படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமா தேவியின் சிலம்பினுள்ளே முத்துக்கள் பரலாக இடப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. (வழக்குரை காதை 69)
'தாம்ரபர்ணிகம்' என்றும் முத்தை அர்த்தசாஸ்திரம் கூறுவது போலவே பாண்டிய கவாடகம் என்னும் முத்தையும் கூறுகின்றது. இந்தப் பெயரே இது பாண்டி நாட்டில் உண்டானது என்பதைத் தெரிவிக்கின்றது.
சேர நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய முசிறிப் பட்டினத்திலும் முத்துக்கள் கிடைத்தன. பேர் போன பெரியாறு முசிறிக்கு அருகில் கடலில் கலக்கிற இடத்தில் முத்துக்கள் உண்டாயின. அந்த முத்துக்கள்