பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
139
“Note; Aiyer is the tadbbava of Arya. Though Arya generally refers ot Brahman Kshatriya and Vaisiya, yet is may refer here only to Brahmin since Brahman alone is said to have gone south from north India.”3
தமிழ் நாட்டிலே இருந்துவரும் தெலுங்கராகிய சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி (தமக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிக்கொண்டே தமிழ் இலக்கியக் காலங்களைப் பற்றித் தவறாக எழுதிக்கொண்டிருப்பவர்) இந்த “ஐயர் யாத்தனர் கரணம்” என்பதற்குத் தமது கருத்தையும் எழுதியுள்ளார். “தமிழ் நாட்டிலே திருமணத்தை மதச்சடங்காக நிறுவினவர் ஆரியர் என்று தொல்காப்பியம் திட்ட வட்டமாகச் சொல்லுகிறது” என்று இவர் உண்மையைக் கண்டவர் போல எழுதிவிட்டார். மேலும் எட்டு வகையான திருமணம் ஆரியருடையதென்றும் அதனைத் தொல்காப்பியம் கூறுகிறதென்றும் எழுதுகிறார்.4
இவ்வாறு நச்சினார்க்கினியரும், மு. இராகவையங்காரும், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியும், நீலகண்ட சாஸ்திரியும் ஆகிய பார்ப்பனர்கள் ஐயர் என்னும் சொல்லுக்கு ஆரியப் பார்ப்பனர் என்று முன்பின் ஆராயாமலும் அச்சமில்லாமல் எழுதிவிட்டார்கள்.
ஐயர் என்னும் சொல்லுக்கு ஆரியப் பார்ப்பனர் என்று பொருள் உண்டா?
ஐயர் என்னும் சொல் பார்ப்பனருக்கு சாதிப் பெயராக எக்காலத்தில் ஏற்பட்டது?
சங்க காலத்தில் இச்சொல் எந்தப் பொருளில் வழங்கப்பட்டது?
இந்தப் பார்ப்பனர்கள் இந்தச் சூத்திரத்திற்கு எழுதிய பொருள் செம்பொருள்தானா? இது ஏற்கத் தகுந்ததுதானா? இவற்றை இங்கு ஆராய்ந்து உண்மை காண்போம்.
ஐயர் என்னும் சொல் தமிழ் நாட்டில் பிராமணருக்குச் சாதிப் பெயரைச் சுட்டுஞ் சொல்லாக இப்போது வழங்கப்படுகிறது. இச்சொல் பிராமணருக்குச் சார்த்தி வழங்குவது மிகச் சமீப காலத்து வழக்கம். விஜயநகர அரசர் காலந்தொடங்கி (கி.பி. 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி இச்சொல் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு ஐயர் என்னும் சொல் பிராமணரைச் சார்த்தி வழங்கப்படவில்லை.