பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
153
4. தொல்காப்பிய ஆய்வுரை - அறிவர்
தொல்காப்பியத்தில் அறிவர் என்போர் கூறப்படுகின்றனர். அறிவர் என்பவர் யார்? அவர்கள் இல்வாழ்வோரா, துறவியரா? அறிவர் என்பர் முழுதுணர்ந்தவர் என்று பொருள் கூறுகிறார் நச்சினார்க்கினியர். அதாவது இல்லற வாழ்க்கையைத் துறந்து தவம் செய்யும் முனிவர் என்று கூறுகிறார். இளம்பூரணர், அறிவர் என்பவர் இல்லற வாழ்க்கையில் இருக்கும் கணிவன் என்று பொருள் கூறுகிறார்.
“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனத் தொடங்கும் தொல்: பொருள் புறத்திணையில் 16ஆம் சூத்திரத்தில் அறிவன் கூறப்படுகிறான்.
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்
என்று தொல்காப்பியர் அறிவனைக் கூறுகிறார். “காமம் வெகுளி மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்வுடையோன் பக்கமும்” என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார். அதாவது, முன் கூறியதுபோலவே, அறிவனைத் துறவி என்று கூறுகிறார்.
இளம்பூரண அடிகள் உரை இது: “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன்”
இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றலாவெனில், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிருபடத்துள்.
பனியும் வெயிலுங் கூதிரும் யாவும்
துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய
தனிவுற் றறிந்த கணிவன் முல்லை
எனவும் ஓதலின் மேலதே பொருளாகக் கொள்க.
அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியினாலாற்றுதலாவது பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன்வீழ்வும்