170
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
வாள் வைத்த கோட்டம் என்பது. இந்தச் சாசனம் செய்யுளாக எழுதப்பட்டிருக்கிறது.
1.
2.
3.
ஆதி யெழு நூற்றுடன் தொண்ணூற்றையா மாண்டி லற்பசியேழ் முற்றசமி யவிட்டம் வெள்ளி மாதிசைசேரின்னாளி லிரவி வேந்தன் மனமகிழப் பகவதி வாள் வைத்த கோட்டத்
தோதிலுறு மிறைவி யிருப்பதற்கு மேன்மையுறும் முகமண்டபமா மதற்கு நாப்பண்
மூதறிவா லொருகலின் மண்டபமுஞ் செய்வித்தான் முல்லைமங்கலன் திருவிக்கிரமன் தானே.3
அடிக்குறிப்புகள்
(Atakur Inscriptions of Krishna III and Bituga II -A. D. 949-50. PP. 50-57. Epigraphia Indica. Vol. VI. 1900-01).
(A Note on the World Balgalchchu. Indian Aniquary, Vol, X L. 1911.
Balgalchchu Gottam, Epigraphia Indica, Vol. VI. P. 35.)
No. 125. Three Records of Valvichcha Kottam. Travancore Archaeological Series. Vol. VI, Part. I).
8. கழுதை ஏர் உழுதல்
ஒரு அரசன் பகையரசனுடைய கோட்டையை அழித்து ஏரில் கழுதையைப் பூட்டி ஏர் உழும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. இவ்வழக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால், “தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு” என்று தொடங்கும் பொருளதிகாரம் புறத்திணையியல் சூத்திரத்தில் வருகிற 'மன்னெயில் அழித்த மண்ணுமங்கலமும்' என்னும் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கழுதை ஏர் உழுதலைக் கூறுகிறார்.
“மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங்கொள்ளும் வித்திமங்கல மல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடுமங்கலமும்" என்பது அவர் கூறும் உரை.