உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

227


13. சங்ககாலத்து இசைச்செய்தி*

நிலவுலகத்திலே மிருகம்போலத் திரிந்து வாழ்ந்த ஆதிகாலத்து மனிதர், நாகரிகம் அடைந்து நற்பண்பு பெற்ற காலம் முதல் இசைக் கலையை வளர்த்து வருகிறார்கள். உலகத்திலே இசைக்கலை நெடுங் காலமாக வளர்ந்து வருகிறது. முழு நாகரிகம் பெறாமல் காட்டுமிராண்டி களாக வாழும் மக்களுங்கூட இக்காலத்தில் இசைபாடி மகிழ்கிறார்கள். துன்பமும் துயரமும் சூழ்ந்த மனித வாழ்க்கையிலே சிறிது நேரம் ஓய்வு கொண்டு இசையைப் பாடியும் இசையைக் கேட்டும் மனச்சாந்தியடை கிறது மனித இனம்; இசையைப் பயின்று இசையைப் பாடி இசையைக் கேட்டு இசையில் திளைத்து இசையில் முழுகி மகிழ் கின்றனர் மனிதர். இசைப்பாட்டைச் சுவைத்து இன்பமடையாதவன் மனிதன் அல்லன்; அவனைக் கொடிய துஷ்டமிருகம் என்று கூறலாம். இசைக்கலையாகிய நுண்கலை மானிடர் எல்லோருக்கும் உரியது. குழந்தை முதல் கிழவர் வரையில் எல்லோரையும் இசைக்கலை இன்புறுத்தி மகிழ்விக் கிறது. மனித குலத்தின் வரப்பிரசாதமாக, இன்சுவை அமுதமாக, ஆனந்தத் தேனாக இசைப்பாட்டின் இன்பவூற்று மக்களின் மனத்தை மகிழ்விக்கிறது.

"

தொன்றுதொட்டு இசைக்கலையைத் தெய்விகப் பொருளாகக் கருதிவருகின்றனர் தமிழர். தமிழ்நாட்டின் புனிதமான விழுமிய பொருளாக இருக்கிறது இசைச்செல்வம். கடவுளுக்குச் செலுத்தும் அன்புக் காணிக்கையை, பக்தியை, இசைப் பாட்டாகக் கொடுத்தான் தமிழன். வைணவ ஆழ்வார்கள் இசைத்தமிழைப் பாடித் திருமாலின் திருவருளைப் பெற்றார்கள்; சைவ அடியார்களும் இசைத் தமிழைப் பாடியே சிவபெருமானின் திருவளைப் பெற்றார்கள். பௌத்தரும் சமணருங்கூட புத்த பகவனையும் அருக தேவனையும் இசைத்தமிழ் பாடி மனமுருகி வணங்கினார்கள்.

பண்டைக் காலத் தமிழர், சங்கம் அமைத்துத் தமிழை ஆராய்ந் தார்கள். அவர்கள் வெறும் இயற்றமிழைமட்டும் ஆராயவில்லை. இயற்றமிழோடு இசைத்தமிழையும் ஆராய்ந்தனர்; இசையோடு

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.