உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


அழிந்துபோன பல நகரங்களும் பட்டினங்களும் அகழ்ந் தெடுக்கப்பட்டன. அகழ்ந்தெடுக்கப்படாத, பூமியில் புதையுண்டிருக் கிற ஊர்கள் இன்னம் பல உள. அவற்றுள் ஒன்று உறையூர்.

பண்டைக் காலத்திலே புகழ் பெற்று விளங்கிய உறையூர், பிற் காலத்திலே எவ்வாறு அழிந்துவிட்டது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில், உறையூரைப் பற்றிச் சங்க நூல்களிலும் பிற நூல்களிலும் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம்.

சோழர்களின் உள்நாட்டுத் தலைநகரமாக இருந்தது உறையூர். உறையூரை, உறந்தை என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இது காவிரி யாற்றின் தென்கரையில் இருந்தது. உறையூருக்குக் கிழக்கே நெடும் பெருங்குன்றம் ஒன்று இருந்தது என்று அகநானூறு 4ஆம் பாட்டுக் கூறுகின்றது:


"கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்.


அந்த நெடும்பெருங் குன்றம், இப்போது திருச்சிராப்பள்ளி மலை என்று வழங்கப்படுகிறது. பிடவூர் என்னும் ஊர். உறையூருக்குக் கிழக்கே இருந்ததாகப் புறநானூறு (395) கூறுகிறது.

உறையூரைக் கோழி என்றும், கோழியூர் என்றும் கூறுவர். "கோழியோனே கோப்பெருஞ் சோழன்" என்பது புறம், 212 பாட்டு. "உறையூரென்னும் படைவீட்டிடத்திருந்தான் கோப்பெருஞ் சோழன்” என்பது இதன் பழைய உரை. “வஞ்சியும் கோழியும் போல" என்பது, பரிபாடல் திரட்டு, 7ஆம் செய்யுள் அடி. கோழி என்னும் சொல்லின் வேறு பெயர்களாகிய வாரணம், குக்குடம் என்னும் பெயர்களும் உறையூருக்கு உண்டு.

உறையூருக்குக் கோழியூர் என்று பெயர் வந்த காரணத்தைச் சிலப்பதிகாரம் கூறுகிறது:

"முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்செவி வாரணம் புக்கனர் புரிந்தென்'

""

(சிலப், நாடுகாண் காதை)

"முறம்போலும் செவியையுடைய யானையைச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறையையுடைய கோழி என்னும் நகரின் கண்ணே விருப்பத்