உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


தோழிக்கு சொல்லியதாக இப்புலவர்பெருமான் செய்த செய்யுள் ஒன்றில் தற்செயலாக இதனைக் குறிப்பிடுகின்றார். அது வருமாறு:

"அரம்போ ழல்வளை செறிந்த முன்கை

வரைந்துதாம் பிணித்த தொல்கவின் றொலைய

வெவனாய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன் தெரிகோ லன்ன செயிர்தீர் செம்மொழி

யுலைந்த வொக்கல் பாடுநர் செலினே யுரன்மலி யுள்ளமொடு முனைபா ழாக அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்ன னன்னாட்டு ஏழிற் குன்றத்துக் கவாஅற் கேழ்கொளத் திருந்தரை நிவந்த கருங்கால் வேங்கை யெரிமருள் கவள மாந்திக் களிறுதன் வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை கல்லூர் பாம்பிற் றோன்றும்

சொல்பெயர் தேஎத்த சுரனிறந் தோரே”

(அகம், 349)

நன்னன் என்னும் சிற்றரசனது ஏழிற் குன்றத்துக்கப்பால் மொழிபெயர் தேயம் - அஃதாவது, தமிழ் அல்லாத வேறுமொழி வழங்கும் தேசம் இருந்த தென்பது இப்பாட்டில் பெறப்படுகின்றது. இந்த ஏழிற்குன்றம் குடகடற் பக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொங்கண நாடாகிய துளுநாட்டில் உள்ளது. எனவே, தமிழ் நாட்டின் வடவெல்லை மேற்கடற் பக்கமாகவுள்ள ஏழிற் குன்றத்தையும் கீழ்க்கடற் பக்கமாகவுள்ள வேங்கட மலையையும் கொண்டிருந்தது என்பது நன்கு விளங்குகின்றது.

ஏழில்மலை இப்போது மலபார் மாவட்டத்தில் உள்ள கண்ண னூருக்கு வடக்கே பதினெட்டு மைலுக்கப்பால் இருக்கிறது. இங்கு ஏழில்மலை என்னும் இரயில் நிலையமும் உண்டு, ஏழில்மலை என்பதை உச்சரிக்கத் தெரியாதவர்கள் அதனை எலிமலை என்று வழங்கினர். பிற்காலத்தில் அந்த எலிமலையை வடமொழியில் மூஷிக மலை (மூஷிகம்-எலி) என்று மொழி பெயர்த்துக்கொண்டனர். அந்த மலைப்பகுதியை ஆண்ட அரசகுலத்தைப் பற்றி 'மூஷிக வம்சம்' என்னும் வடமொழி நூலையும் எழுதிவிட்டனர். பிற்காலத்தில் போர்ச்சு கீசியர் இந்த மலையை மவுண்ட டி எல்லி என்று கூறினர். தமிழ் நாடாக இருந்த சேரநாடு பிற்காலத்தில் மலையாள பாஷை பேசும் நாடாக மாறி