உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

251


பெரிப்ளசும், டாலமியும் கூறுகிற கமரா என்னும் பட்டினம் சோழ நாட்டில் பேர் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்ப் பட்டினம்) ஆகும்.

பொடுகா என்றும் பொடுகே என்றும் அவர்கள் குறிப்பிடுகிற துறைமுகத்தைச் சிலர், இப்போதுள்ள புதுச்சேரி என்று கருதுகிறார்கள். இது தவறு எனத் தோன்றுகிறது. புதுச்சேரி பழைய துறைமுகப் பட்டினம் அல்ல. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரரால் புதுச்சேரி துறைமுகப்பட்டின மாக்கப்பட்டது. எனவே, புதுச்சேரி பழைய துறைமுகம் அல்ல. பொடுகா அல்லது பொடுகே என்று கிரேக்க நூலாசிரியர் குறிப்பிட்ட இடம், புதுச்சேரிக்கு அருகிலே, தெற்குப் பக்கத்தில் கடற்கரை ஓரமாக உள்ள அரிக்கமேடு என்னும் இடமாக இருக்க வேண்டும். அரிக்கமேட்டை அண்மைக் காலத்தில் அகழ்ந்து பார்த்தபோது, அது கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்த துறைமுகப் பட்டினம் என்பது தெரிந்தது. அங்கிருந்து கண்டெடுக்கப் பட்ட பொருள்கள், அங்கு யவன வாணிகர் தங்கியிருந்ததையும் அது துறை முகப்பட்டினமாக இருந்தது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. இது பற்றி ‘பண்டைய இந்தியா' என்னும் ஆங்கில வெளியீட்டில் விபரமாக அறியலாம். (Arikamedu : An Indo-Roman Trading Station on the East Coast of India. By R.E.M. Wheeler, A. Ghosh and Krishna Deva. Pp. 17-124. "Ancient India". No. 2. 1946)

இதற்கு வடக்கே இருந்தது சோபட்மா என்னும் துறைமுகப் பட்டினம் என்று பெரிப்ளஸ் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சோபட்மா என்பது சோபட்னா என்பதன் திரிபு. சோபட்னா என்பது சோபட்டினம் ஆகும். அதாவது எயிற்பட்டினம். சோ என்றாலும் எயில் என்றாலும் மதில் என்பது பொருள். மதில் சூழ்ந்த கோட்டைக்குள் அமைந்திருந்த படியால் எயில் பட்டினம் என்றும் சோபட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது.

எயிற் பட்டினமாகிய சோபட்டினத்தை டாலமி என்பவர் மேலங்கே என்று கூறுகிறார். மேலங்கே என்பது சிறுபாணாற்றுப் படை கூறுகிற மாவிலங்கை ஆகும். ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதிக்குப் பட்டினநாடு என்பது பெயர். பட்டின நாட்டில் நீரும் திடலும் அதிகமாகக் காணப்பட்ட படியால் அப்பகுதி மாவிலங்கை என்று பெயர் பெற்றிருந்தது என்று மேலே கூறினோம். டாலமி ஆசிரியர்