உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. போக்குவரத்துச் சாதனங்கள்

வாணிகப் பொருள்கள் எல்லாம் ஒரே இடத்தில் உற்பத்தியாவ தில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்கள் உற்பத்தி யானபடியால், அப்பொருள் களையெல்லாம் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு வாணிகர் கால்நடைகளையும் வண்டிகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால், இக்காலத்தில் உள்ள உந்து வண்டிகள், இரயில்வண்டிகள், வானஊர்திகள் போன்ற விரைவான போக்குவரத்துச் சாதனங்கள் இருப்பது போல அக்காலத்தில் இல்லை. ஆகவே அவர்கள் எருது, கழுதை வண்டி, படகு, பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தி னார்கள். எருமைக்கடாவை ஏர் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். எருமைகளைப் பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் பயன்படுத்த வில்லை. பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. எருதுக்கு அடுத்தபடியாகக் கழுதை பொதி சுமக்கப் பயன்பட்டது. கழுதைகள் வண்டியிழுக்கப் பயன்படவில்லை.

சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. அவை கடல் வழியாகக் கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. குதிரைகளை அரசர் போர்செய்யப் பயன்படுத்தினார்கள். நால்வகைப் படைகளில் குதிரைப் படையும் ஒன்று. தேர்ப் படையில் தேர்களை (போர் வண்டிகளை) இழுக்கவும் குதிரைகள் பயன்பட்டன. குதிரை வண்டிகளை அரசரும் செல்வரும் பயன்படுத்தினார்கள். ஆனால், அக்காலத்தில் தமிழர் குதிரைகளைப் பொதி சுமக்கவும் வாணிகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு போகிற வண்டிகளை இழுக்க வும் ஏர் உழவும் பயன்படுத்தவில்லை.

அத்திரி

(கோவேறு கழுதைகள்) வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப் பட்டன. கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர் வழங்கப் பட்டது. நாகரிகமுள்ள செல்வ நம்பிகள் அக்காலத்தில் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினார்கள். ஆனால், பொதி சுமக்கவும் சரக்கு வண்டிகளை இழுக்கவும் அவற்றைப் பயன்படுத்த வில்லை. ஊர்தியாக மட்டும் பயன்படுத்தி னார்கள். அத்திரிக்கு இராச வாகனம் என்று பெயர் வழங்கப்பட்டது.