பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
69
சாரணரை வணங்கி அங்குச் சிலநாள் தங்கியிருந்தாள். அவள் புண்ணிய ராசனைக் கண்டு பிறகு திரும்பி வந்தாள் என்று மணிமேகலை காவியம் கூறுகிறது. (மாதவி மகளான மணி மேகலைச் சாவகத்துக்குப் போனதும் அங்கிருந்து திரும்பி வந்ததும் ஆகாயத்தின் வழியாக என்று மணி மேகலைக் காவியம் கூறுகிறது. (மணிமேகலை 25ஆம் காதை) மணி மேகலை சாவகத்துக்குப் போனது கடல்வழியாகக் கப்பலிலேதான். ஆனால் அவள் ஆகாய வழியாகப் பறந்து சென் றாள் என்று காவியங் கூறுகின்றது. (ஏன் அப்படிக் கூறுகின்றது என்பதை விளக்கி இந் நூலாசிரியர் எழுதியுள்ள மணிமேகலையின் விண் வழிச் செலவு என்னும் கட்டுரையில் காண்க.)'
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சாவகத் தீவை யரசாண்ட புண்ணியராசன், அக்காலத்தில் சோழ நாட்டுக் காவிரிப் பூம் பட்டினத் தையும் அதனைச் சூழ்ந்த நெய்தலங்கானலையும் அரசாண்ட நெடுமுடிக்கிள்ளியிடம் (இவனுக்குக் கிள்ளிவளவன் என்றும் வடிவேற் கிள்ளி என்றும் பெயர் உண்டு) தூது அனுப்பினான். அந்தத் தூது வாணிகத் தொடர்பான தூதாக இருக்கக் கூடும். சாவகத்திலிருந்து பூம்புகாருக்குக் கப்பலில் வந்த தூதர் சோழனைக் கண்டனர். பிறகு அந்நகரத்தில் பௌத்த விகாரையின் தலைவராக இருந்த அறவண அடிகளையும் கண்டு, திரும்பிச் சென்றார்கள். இதனை மணிமேகலைக் காவியமே கூறுகிறது.
'கிள்ளி வளவனோடு கெழுதகை வேண்டிக் கள்ளவிழ் தாரோய்! கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள்பிறப் புணர்ந்தாங்கு
ஓதினன் என்றியா னன்றே யுரைத்தேன்'
(மணி, 25:14-19)
இவ்வாறு சோழ அரசனுக்கும் சாவக அரசனுக்கும் நல்லுறவும் நட்பும் இருந்தபடியால் இரு நாடுகளுக்கும் வாணிகம் செவ்வையாக நடந்து வந்தது.
குறிப்பு: பிற்காலத்தில், இரு நாடுகளுக்கும் நிகழ்ந்த அரசியல் போர்களைப் பற்றி இங்குக் கூறவில்லை. இங்கு இப்போது நாம் எழுதுவது சங்க காலத்து வாணிகத்தைப் பற்றி மட்டுமே.
1. பக்கம் 176 - 182 கட்டுரைப் பொழில் மணிவிழா மலர் கரந்தைத் தமிழ்ச் சங்கம். 1973.