உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மேட்டுப்பட்டி (சித்தர்மலை)

மதுரை மாவட்டத்து நிலக்கோட்டையிலிருந்து தெற்கெ ஆறு கல் தொலைவில் அம்மைய நாயக்கனூரும் அவ்வூரைச் சார்ந்து மேட்டுப்பட்டிக் கிராமமும் உள்ளன. வைகையாறு பேரணைப் பக்கமாகத் திரும்புகிற இடத்தில் ஆற்றங்கரைக்கு அருகில் அழகான இயற்கைச் சூழ்நிலையில் சித்தர்மலை அமைந்திருக்கிறது. மலையின் மேலே சிவன் கோயில் இருக்கிறது. இம் மலையின் தெற்குப்புறத் தாழ்வரையில் பெரிய குகையும், குகைக்குள்ளேயே பாறையில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் உள்ளன. இவற்றை ஊரார் பஞ்சபாண்டவர் படுக்கை என்று கூறுகிறார்கள். இந்த நீண்ட குகைக்குள்ளே பக்கத்துக்கு ஐந்து படுக்கையாக இரண்டு வரிசையில் பத்துக் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலையணைப் பக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் வாயிலை இப்போது கல்லும் மண்ணும் இட்டுச் சுவர் எழுப்பி அடைத்துள்ளனர். சுவரில் உள்ள சிறுவாயிலில் புகுந்து உள்ளே சென்றால் கற்படுக்கைகளைக் காணலாம். கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் 1908 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாண்டு எபிகிராபி இலாகா அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

1

இந்தப் பிராமி எழுத்துக்களின் நிழற்படங்களை 1912ஆம் ஆண்டு எபிகிராபி இலாகா அறிக்கையில் 57ஆம் பக்கத்தில் வெளியிட்டுள் ளனர். இந்த எழுத்துக்கள் கற்படுக்கைகளை அமைத்தவர்களின் பெயர்களைக் கூறுகின்றன. பிராமி எழுத்துக்களின் வரிவடிவத்தையும் அவற்றின் பக்கத்தில் இப்போதைய எழுத்தையும் காட்டுகிறோம்.

CR 197

(1) பதன ஊர் அதன்