உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

12

பிடந்தை என்பது ஒருவன் பெயர். சங்கச் செய்யுள்களில் பிட்டங்கொற்றன் கூறப்படுகிறான். இவன் வானவன் (சேரனுடைய) மறவன் (சேனைத் தலைவன்) என்று கூறப்படுகிறான். பிட்டங் கொற்றனைப் ‘பிட்டன்' என்றும் கூறுவர்.13 அவனைக் கொற்றன் என்றும் கூறுவர்.4 பிட்டன் என்றும் கொற்றன் என்றும் கூறப்பட்ட பிட்டங்கொற்றனுக்கு எந்தை என்னும் சிறப்புப் பெயரும் இருந்தது. பிட்டங்கொற்றனைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ண னார் புறநானூறு 171இல் பாடியுள்ளார். அதன் அடிக்குறிப்பு 'பிட்டங் கொற்றனைப் பாடியது' என்று கூறுகிறது. அச் செய்யுளில் அவர் அவனை கொற்றன் (அடி 7) என்றும் எந்தை (அடி 12) என்றும் கூறுகிறார். ஆகவே அவனுக்குப் பிட்டெந்தை என்னும் பெயர் இருந்தது தெரிகிறது.

இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் பிடந்தை என்பவன் கூறப் படுகிறான். பிடந்தை என்பது பிட்டெந்தை என்பதன் திரிபு. நள்ளியூர்ப் பிடந்தை, சங்கச் செய்யுள்களில் கூறப்பட்ட பிட்டெந்தையாக இருக்கலாம். கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர். இவன் பிடந்தையின் மகன்.

நள்ளியூரில் இருந்த பிடந்தை (பிட்டனெந்தையின்) மகனான கீரன் கொற்றன் இந்தக் கற்படுக்கைகளைச் செய்து கொடுத்தான் என்பது இக் கல்வெட்டின் பொருள்.

ம்

மேலே கூறப்பட்ட கீரன் கொற்றனுடைய தங்கையும் இந்தக் குகையில் கற்படுக்கையை யமைத்துத் தானம் செய்திருக்கிறார். அவருடைய பெயர் கீரன் கொற்றி என்பது. இவருடைய பெயரையும் இந்தக் கல்வெட்டு கூறுகிறது. இது 1963-64ஆம் ஆண்டின் கல்வெட்டுத் தொகுப்பில் 296ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.15 1927-28ஆம் ஆண்டின் 346ஆம் எண்ணுள்ள கல்வெட்டும் 1963-64 ஆம் ஆண்டின் 296ஆம் எண் கல்வெட்டும் தமயன் தங்கைமாரைக் குறிக்கின்றன என்பதைச் சாசன இலாகா அலுவலகர் ஒருவரும் தெரிந்துகொள்ளவில்லை. இக் கல்வெட்டைப் படித்த திரு.ஐ. மகாதேவனும், இதை அறியவில்லை. இந்த இரண்டு கல்வெட்டுக்களும் தமயன் தங்கையாரைக் காட்டுகின்றன என்பது எம் ஆராய்ச்சியினால் காணப்பட்டது. இந்தக் கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்தின் வரி வடிவத்தைத் திரு. ஐ. மகாதேவன் வெளியிட்டுள்ளார். இதை இவர் நேரில் கண்டு