உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

தன்னுடைய பிள்ளைகளை அழைத்து மறவர்கள் கவர்ந்து கொண்டு போன ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வருமாறு ஏவினான். அவர்கள் சென்று மறவர்களுடன் போர் செய்தார்கள். ஆனால் மறவர்கள் எய்த அம்புக்கு ஆற்றாமல் போர்க்களத்திலிருந்து ஓடி வந்துவிட்டார்கள். இந்தச் செய்தியைச் சிலர் அரசனிடம் சென்று தெரிவித்தார்கள். அரசனுடைய மக்கள் தோற்று ஓடிவந்துவிட்டதை வெகு நயமாகக் கூறினார்கள்.

வம்புகொண் டிருந்த மாதர்

வனமுலை மாலைத் தேன் சோர் கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங் கயல் தடங்கண்போலும் அம்பு கொண்டரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார்

செம்பு கொண்டன்ன இஞ்சித்

திருநகர்ச் செல்வ! என்றார். (கோவிந்தையார் இலம்பாம் 31)

இதில், 'அம்பு கொண்டரசர் மீண்டார் ஆக்கொண்டு மறவர் போனார்' என்பது படித்துப் படித்து இன்புறத்தக்கது.

போரிலே பின் வாங்காமல் வீரப்போர் செய்து உயிர் விட்டவர்களின் உயிர் விண்ணுலகஞ்சென்று வீரசுவர்க்கத்தைச் சேர்கிறது என்றும், அந்த வீரசுவர்க்கத்தில் அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் என்றும் அக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளியும் 'போர்' என்னும் ஊரில் போர் செய்தார்கள். அந்தப் போரில் இரண்டு பேரும் உயிர் விட்டார்கள். இறந்துபோன அவர்கள் ‘அரும்பெறல் உலகத்தை' யடைந்தார்கள் என்று கழாத்தலையார் என்னும் புலவர் (புறம் 62) கூறுகிறார்.

வாடாப் பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்றனரால்.

(புறம் 62 : 16-19)

சீவகசிந்தாமணி மண்மகள் இலம்பகத்தில், வீரப்போர் செய்து மாண்டவர் வீரசுவர்க்கம் அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது.