உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

187

அல்லது கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்தச் சாசன எழுத்தின் உருவ அமைப்பைக் கொண்டு கருதப்படுகிறது. ஒருவேளை இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். அசோக சக்கரவர்த்தி, தமது ஆட்சிக்கு உட்படாத தமிழகத்தில் (சேர சோழ பாண்டிய சத்திய புத்திர நாடுகளில்) பௌத்த முனிவர்களை அனுப்பியதாக அவருடைய சாசனங்களில் இரண்டு சாசனங்கள் கூறுகின்றன.

நமது ஆராய்ச்சிக்குரிய இந்தச் சாசனத்திலே அந்தக் குகையில் வசித்த முனிவரின் பெயரும், அக்குகையில் கற்படுக்கைகளை அமைத்தவர் பெயரும், அக்காலத்தில் அரசாண்டிருந்த பாண்டியன் பெயரும் கூறப்படுகின்றன.

சங்க காலத்துச் சாசனங்கள் கிடைக்கவில்லை என்று இதுவரை குறை கூறப்பட்டு வந்தது. இந்தச் சாசனம் அந்தக் குறையை நீக்கிவிட்டது.

இனி, இந்தச் சாசனம் என்ன கூறுகிறது என்பதை ஆராய்வோம். கணியன் நந்தி என்னும் முனிவர் பெயரும் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் பெயரும் குகையைச் செப்பஞ் செய்து கொடுத்த கடலன் வழுதி என்பான் பெயரும் இந்தச் சாசனத்தில் கூறுப்படுகின்றன. நெடுஞ்செழியன் என்னும் பெயர்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய தலையாலங் கானத்துப் போரை வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும் அவனுக்கு முன்பு இருந்த ஆரியப் படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனையும் (இவன் கோவலனைத் தவறாகக் கொன்றவன்) அறிவோம். அந் நெடுஞ்செழியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தவர்கள். ஆனால், இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற நெடுஞ்செழியன் அவர்கள் காலத்துக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவன். இது இந்தச் சாசன எழுத்தைக் கொண்டு யூகிக்கப்படுகிறது. எனவே இந்தப் பாண்டியன் நெடுஞ் செழியன் கடைச் சங்க காலத்தில் இருந்தவன் என்பது தெரிகின்றது.

6

இந்தச் சாசனம், குகையின் முன்புறத்தில் பெரிய எழுத்துகளால் ஒரே வரியாக எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினோம். ஒரே வரியாக