உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கொங்கு நாட்டில் பிராஃமி எழுத்துக்கள்*

பிலவ ஆண்டு வைகாசித் திங்கள் 13-ஆம் நாள் வெள்ளிக் கிழமை (26-5-1961) பகல் இரண்டு மணிக்கு நாங்கள் கொங்கு நாட்டு அரச்சலூரையடைந்தோம். நாங்கள் என்றால் இக் கட்டுரையாளரும், சீவபந்து ஸ்ரீபால், வித்துவான் செ. இராசு, வித்துவான் பச்சை யப்பன், வித்துவான் சென்னியப்பன், அவர்களும் ஆகும். அரச்சலூர் ஈரோட்டிலிருந்து பழைய கோட்டை வழியாக 12 ஆவது கல்லில் இருக்கிறது. வெயில் எரிக்கும் பகல் வேளையில் அவ்வூர் மலையடி வாரத்தை ஒட்டிய காட்டுவழியாக ஒருமைல் தூரம் நடந்தோம். பாதை இல்லாத காட்டுவழியாகையால் முட்செடி கொடிகளால் இடர்ப்பாடுகள் விளைந்தன. எப்படியோ தட்டித்தடுமாறி மலையின் மற்றொரு புறத்தி லிருக்கிற ஆண்டிப் பாறை என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆண்டிப் பாறை என்னும் இடம், மலையின் மேலே உள்ள ஒரு பாழி. அதாவது, பொடவு என்று கூறப்படுகிற இயற்கையாக அமைந்த குகை.

இந்தக் குகையிலே மேடுபள்ளமாக இருக்கிற பாறையிலே ஐந்து கற்படுக்கைகளும், மூன்று பிராஃமி எழுத்துச் சாசனங் களும் இருப்பதைக் கண்டோம். கற்படுக்கைகள், இக் குகையிலே முனிவர்கள் வசித்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த முனிவர்கள் பௌத்த முனிவர்களாகவோ, ஜைன முனிவர்களாகவோ இருக்கவேண்டும்.

இந்தக் கற்படுக்கைகளிலே மூன்று சாசனங்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. சாசனங்கள் சுருக்கமாக இரண்டுவரி, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளன. இரண்டு சாசனங்களின் எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகின்றன. ஒரு சாசனம் சிதையாமல் நல்ல நிலையில் இருக்கின்றது. இதிலும் மூன்று நான்கு எழுத்துக்கள் சிறிது சிதைந்துள்ளன. சாசன எழுத்துக்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதனால். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு ஆ களுக்கு முன்பு இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். பிராஃமி எழுத்துக்கள் தமிழ்நாட்டிலே வழங்கப்பட்டது அசோக * செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு35: 10.1961.

டு