உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

படாமலே கிடந்தன. இந்தக் கல்வெட்டுக்களைப் படிக்க, திறவுகோல் கிடைக்காமல் இருந்தது.

கடைசியாக கி.பி. 18ஆம் நூற்றாண்டில் பிரின்ஸிப் என்னும் பெயருள்ள ஆங்கிலேயர் பல காலம் முயன்று பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் படித்துத் திறவுகோலைக் கண்டுபிடித்தார். அஃதாவது பிராமி எழுத்தில் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டுபிடித்தார். அக்காலத்தில் ஆங்கிலேய தளபதிக்கு அங்குப் பழங்காசுகள் கிடைத்தன. அந்தக் காசுகளை அவர் வங்காள நாட்டுக்கு அனுப்பினார். பழம் பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரின்ஸிப் அந்தப் பழங்காசுகளை ஆராய்ந்தார். அந்தப் பழங்காசுகள் சிலவற்றில் அசோக மன்னர்காலத்து எழுத்துக்கள் (பிராமி எழுத்துக்கள்) பொறிக்கப்பட்டிருந்தன. அக் காசுகளின் மறுபக்கத்தில் பழைய கிரேக்க எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன. கிரேக்க எழுத்துச் சொற்களே பிராமி எழுத்திலும் எழுதப்பட்டிருந்தது என்பதை யறிந்த இவர் கிரேக்க ஒலியைக் கொண்டு பிராமி எழுத்துக்களின் ஒலியைக் கண்டுபிடித்தார். இப்படிப் பல காலம் உழைத்ததன் விளைவாகப் பழைய பிராமி எழுத்துக்களின் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டறிந்தார். பிராமி எழுத்தின் வரி வடிவத்துக்கு ஒலி வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதனால், பழைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த பிராமி எழுத்து வாசகம் 18ஆம் நூற்றாண்டில் படிக்கப்பட்டது.

தமிழ்ப் பிராமியின் வாசகம்

1906ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த எழுத்துக்கள் நெடுங்காலம் படிக்கப்படவில்லை. பழம்பொருள் ஆய்வுத் துறையினர், இவ்வெழுத்துக்கள் பாலி மொழி அல்லது பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதாகக் கருதினார்கள். இந்தக் கருத்து பல ஆண்டுகள் நிலவியிருந்தது. இந்தப் பிராமி எழுத்துக்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டன என்பதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிந்தனர். பிறகு இவ்வெழுத்துக்களைப் படித்த சிலர் தமிழராக இருந்தும் இக் கல்வெட்டுகளின் கருத்தைச் சரியாக அறியவில்லை. காரணம் என்னவென்றால், இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காலத்தில் (கடைச் சங்க காலத்தில்), தமிழ்நாட்டில் இருந்த இலக்கியங்