உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

எல்லோரும் வழங்கினார்கள் என்று கூறுவது வரலாறு அறியாதவர் கூற்றாகும்.

துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி எழுத்தினாலே துருக்கி மொழியின் இலக்கண, இலக்கியங்கள் தொன்று தொட்டு எழுதப்பட்டன. அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்தப் புரட்சி காரணமாக, பழைய அரபி எழுத்து மாற்றப் பட்டுப் புதிதாக இலத்தின் (ஆங்கில) எழுத்து அங்கு எழுதப் படுகிறது. துருக்கி மொழி நூல்களும், இலக்கியங்களும் இக்காலத்தில் இலத்தின் எழுத்தினால் எழுதப்பட்டு வருகின்றன. இலத்தின் எழுத்துக்களால் துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதப்படுவதனால், இலத்தின் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி மொழியின் இலக்கிய இலக்கணங்கள் ருவடைந்தன என்று எந்த அறிஞரும் கூறமாட்டார். துருக்கி மொழியில் எழுத்து மாறிற்றே தவிர, இலத்தின் எழுத்து வந்தபிறகுதான் துருக்கி மொழி இலக்கியங்கள் தோன்றின என்பது தவறு. இது யாவரும் அறிந்ததே.

இதுபோலவே, சங்ககாலத்தில், பழந்தமிழ் எழுத்துக்குப் பதில், பிராமி எழுத்து எழுதப்பட்டபோது, எழுத்து மாறிற்றே தவிர, பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழ் இலக்கியம் தோன்றிற்று என்பதும் தவறு. தமிழ் மரபும் தமிழ்மொழி வரலாறும் அறியாதவரே தவறான கருத்தைக் கூறுவர்.

படித்த முடிவுகள்

தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்டவை என்று கூறினோம். அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப் பட்டவை என்று சொன்னோம். இந்த எழுத்துக்களைப் படித்துப் பொருள் காண அறிஞர் சிலர் முயன்றனர். இராவ்சாகிப் எச். கிருட்டிண சாத்திரி, கே.வி. சுப்பிரமணிய அய்யர், சி. நாராயண ராவ், ஐராவதம் மகாதேவன், டி.வி.மகாலிங்கம் ஆகியோர் இந்தக் கல்வெட்டுக்ளைப் படித்துப் பொருள் கூறினார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் ஒரே முடிவுக்கு வரவில்லை. வெவ்வேறு கருத்துக் களைக் கூறிச் சென்றனர். இதற்குக் காரணம் சில எழுத்துக்களை வெவ்வேறு எழுத்தாகக் கொண்டு படித்தது ஒன்று. எழுத்துக்களைச் சேர்த்து, சொல் சொல்லாகப் பிரித்தபோது ஏற்பட்ட மாறுபாடு இன்னொன்று. ஆரியத் தொடர்பைப்