உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

63

மொழியை அரவபாஷை என்றும் கூறுவர். அருவா நாட்டவர் அருவா நாட்டு மொழி என்பது இதன் பொருள்.

குலஸ என்பது குலத்தினுடைய கலத்தைச் சேர்ந்த என்னும் பொருள் உள்ள சொல். ஸ என்பது பிராகிருத மொழி எழுத்து. அருவாள குலஸ என்பதன் பொருள் அருவாள குலத்தைச் சார்ந்த என்பது. எனவே இந்தக் குகையைத் தானஞ் செய்தவர் அருவா நாட்டவர் (தொண்டை நாட்டைச் சேர்ந்தவர்) என்று தெரிகின்றார். நதசெடி என்பது நந்த செட்டி என்பதாகும். செட்டி என்பது வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல். நந்த செட்டி என்பது வாணிகத் தொழில் செய்த நந்தன் என்று பொருள் உள்ளது. புதஸ என்பது புத்திர னுடைய என்னும் பொருள் உள்ள பிராகிருத மொழிச் சொல். ஸிரி என்பது ஸ்ரீ என்பது. வீரிசெட்டி நோ என்பதன் பொருள் வீரி செட்டி யினால் என்பது. இதிலுள்ள ட்டி என்னும் எழுத்து வடமொழி எழுத்து. தான என்பது தானம் என்னும் சொல். தா என்னும் எழுத்து வடமொழி 3ஆம் தகர எழுத்து. அருவாள குலத்தைச் சேர்ந்த வணிகனான நந்தன் என்பவருடைய மகனும் வாணிகனுமான ஸ்ரீவீரி என்பவன் இந்தத் தானத்தைக் கொடுத்தான் என்பது இதன் திரண்ட பொருள்.

அடிக்குறிப்புகள்

1. Annual Report, on South Indian Epigraphy 1937-38 part II. para. 1.