உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள் 67

‘மா(த) தி (ரை)ய் போ நா குல வானா அ(த)னா அ த(ஆ)ன திரு.சி.நாராயணராவ், இதைப் பிராகிருதமாகப் படித்துப் பிறகு சமற்கிருதம் ஆக்குகிறார்.

2

‘மாத்திரைய்-போநா குலவானா அதனா’அ தானா? (பிராகிருதம்) "மாட்டர கீ-புத்ராணம் (பௌத்ராணாம்(?) போதாதரம்(?)

66

(குலபாநாம்)

ஆகாநாய (அஸ்தானாய(?) ஆஸ்தாதஸ்ய(?)) தாநானி' (சமற்கிருதம்) ‘மாட்டரகீ என்பவருடைய மக்கள் (பேரர்கள்?) குலத்தலைவர்கள் (குலத்தவருக்கு?) உணவுக்காகக் கொடுத்த தானம்' என்று பொருள் கூறுகிறார்.

3

திரு.டி.வி.மகாலிங்கம் படித்துப் பொருள் கூறுவது இது. 'மத்திரை பொன் குலவன் அதன் அதன்' பொன்குலவன் என்பதன் பொருள் பொன் வாணிகன். அதன் அதன் என்பது ஆதனுடைய மகன் அதன். மதிரை (மதுரை)யில் இருந்த பொன் வாணிகன் அதன் உடைய மகன் அதன் இதைச் செய்தான்.

திரு.ஐ.மகாதேவன் இவ்வாறு படிக்கிறார்.4

'மத்திரை பொன் கொலவன் ஆதன் அ தான'. ம(த்)திரையி லிருந்து பொற்கொல்லன் ஆதன் கொடுத்த தானம். நாம் இதைப் படிப்போம். பிராமி எழுத்தின் வாசகம் இவ்வாறு இருக்கிறது.

'மத்திரைய் பொன் கொல்லன் அதான் அதான்'

‘மத்திரைய்' என்பது கொச்சைச் சொல்லாகத் தெரிகிறது. இது ‘மதுரை’ நகரத்தைக் குறிக்கிறது. இதன் இறுதியில் உள்ள யகரமெய், ஐகார ஈற்றுச் சொல்லுடன் சேர்த்து எழுதப்படுகிற அக்காலத்து வழக்கப்படி எழுதப்பட்டுள்ளது. 'கொல்வன்' என்பதும் கொச்சைச் சொல். இது கொல்லன் என்றிருக்க வேண்டும். ‘பொன் கொல்லன்' என்று படித்துப் பொன் வேலை செய்பவன் என்று பொருள் கொள்ளலாம். அதான் அதான் என்பதும் கொச்சைச் சொல். இது ஆதன் ஆதன் என்றிருக்க வேண்டும். ஆதன் ஆதன் என்பது பொற் கொல்லனுடைய பெயர். கடைசியில் உள்ள குறி அவன் தானம் செய்த பொன்னின் அளவைக் குறிக்கிறது. மதுரைப் பொன் வாணிகனான