உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

75

திரு. கே.வி. சுப்பிரமணியம் இதை இவ்வாறு படிக்கிறார்.32 சிகற மாறன் தான்' என்று படித்து, சிகற மாறன் என்பவன் புகழ் பெற்ற தச்சன் என்று கூறுகிறார். இவர் மூன்றாம் எழுத்தையும் 5ஆம் எழுத்தையும் வல்லின ‘ற' என்று படிக்கிறார்.

திரு. கிருட்டிண சாத்திரியும், திரு.டி.வி. மகாலிங்கமும் இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும் ஒன்றாக்கிப் படிக்கின்றனர். அவர்கள் ஒன்றாக்குவது தவறு. இந்தத் தொடர் இதனோடு முடிகிறது. அந்தத் தொடருடன் தொடர்புள்ளது அன்று.

திரு.ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை வேறு முறையாக வரைந்து காட்டுகிறார்.

இதில் இவர் முதல் எழுத்தாகக் காட்டுங்குறி முந்திய தொடரின் இறுதியைச் சேர்ந்தது. இவர் இந்தக் குறியின் மேற்பகுதியை வைத்துக்கொண்டு அதை ஞ் என்று படிக்கிறார். இது தவறு. இவர் படிப்பது இது.33

ஞ்சி கழு மாறன் தான்' ஞ்சி என்னும் இடத்தில் இருந்த கழுமாறன் கொடுத்த தானம் என்று பொருள் கூறுகிறார்.

இரண்டு வரிவடிவங்களிலும் எழுத்து மாறுபாடுகள் காணப் படுகின்றன. ஐ.மகாதேவன் ஞ் என்று தவறாகக் காட்டுகிற எழுத்து முதல் வரிவடிவத்தில் இல்லை. அது ஞ் அன்று, ஒரு வகைக் குறியீடு என்று முன்னமே கூறினோம். முன் வரிவடித்தில் மூன்றாவது எழுத்து வல்லின ற போன்று இருக்கிறது, மகாதேவனுடைய வரி வடிவத்தில் இந்த எழுத்து ம என்று காட்டப்படுகிறது. முந்திய வடிவத்தில் ஆறாவது எழுத்து அ போன்று இருக்கிறது. மகாதேவனுடைய வரிவடிவத்தில் அந்த எழுத்து (7-வது எழுத்து) ன போல இருக்கிறது. கல்வெட்டு எழுத்தில் மைப்படி ஒற்றி எடுத்திருந்தால் ஒரே மாதிரிதான் இருக்கும். ஐ. மகாதேவன் மை ஒற்றி எடுக்காமல் கண்ணால் பார்த்து எழுதினார் என்று தோன்றுகிறது. ஆகவே வரிவடிவில் வேறுபாடு காணப்படுகிறது. ஆகவே இந்தக் கல்வெட்டின் சரியான வரி வடிவம் தெரிகிற வரையில் இதைப் படிக்காமல் விடுகிறோம்.

இதற்குப் பிறகுள்ள பிராமி எழுத்துக்களை எபிகிறாபி இலாகாவும் ஐ. மகாதேவனும் வேறு வேறு விதமாகக் காட்டுகின்றனர்.